தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள எ.காமாட்சிபுரத்தை சேர்ந்தவர் செந்தில் (50). கூலித்தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் அங்குள்ள குப்பைத்தொட்டியில் பாதி உடல் எரிந்த நிலையில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் பெரியகுளம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து செந்திலின் உடலை கைப்பற்றி தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இதில் சொத்து தகராறில் செந்திலை கொலை செய்து தீ வைத்து எரித்து உடலை குப்பை தொட்டியில் வீசி சென்று இருப்பது தெரியவந்தது.
Pongal 2022 : பாரம்பரிய மண்வாசனை..பொங்கல் நாள் ஒளி.. மண்பானை உணவின் நற்பலன்கள் தெரியுமா?
இதைத்தொடர்ந்து பெரியகுளம் துணைகாவல் கண்காணிப்பாளர் முத்துக்குமார் தலைமையிலான போலிசார் செந்திலின் உறவினர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர். இதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. செந்திலின் தந்தை சிங்காரவேலுக்கு 2 மனைவிகள். இதில் முதல் மனைவி ராஜம்மாளுக்கு பிறந்தவர்தான் செந்தில். இரண்டாவது மனைவி ரத்தினகிரி (58). இவரது மகன் செல்வக்குமார் (42). செந்திலுக்கும், அவரது சித்தி ரத்தினகிரிக்கும் இடையே சொத்து தகராறு இருந்தது. இந்தநிலையில் செந்தில் தனது பெயரில் இருந்த சொத்துகளை கடந்த சில நாட்களுக்கு முன்பு விற்றார்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்