தேனி மாவட்டத்தில் நாளை மின் தடை பகுதிகளில் ஏற்படும் அசௌகரியத்தை தவிர்க்க முன்னேற்பாடுகளை செய்துகொள்ளுங்கள். தேனி மாவட்டம், கம்பம், கூடலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் நாளை (05/07/23) காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை பராமரிப்பு பணிகள் காரணமாக மின் வினியோகம் இருக்காது என அறிவிப்பு வெளியாகி உள்ளது.



தேனி மாவட்டத்தில் உள்ள மின் நிலையங்களில் மாதத்திற்கு ஒரு முறை பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம். அதன்படி, கம்பம் துணை மின் நிலையத்தில் ஜூலை 5 ஆம் தேதி நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இந்த பராமரிப்பு பணிகள் காரணமாக கம்பம், கூடலுார், உத்தமபுரம், ஊத்துக்காடு, அண்ணாபுரம், புதுப்பட்டி, காமயகவுண்டன்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 10 மணி முதல் மாலை 4.00 மணி வரையும் மின்சாரம் நிறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் மின் தேவை இருப்பின் மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் மின்வாரிய ஊழியர்களுக்கு சிரமம் கொடுக்காமல் பணிகளை செய்யுமாறும், அவர்களுக்கு உரிய ஒத்துழைப்பு தருமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் கம்பம், கூடலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம மக்கள் தங்களுக்கு தேவையான முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை செய்து கொள்ளும்படியும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.


ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்








ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்



ட்விட்டர் பக்கத்தில் தொடர