விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 18-ந்தேதி (திங்கட்கிழமை) கொண்டாடப்பட்ட உள்ளது. இதையொட்டி விழாவை சுற்றுச்சூழல் மாசுபாடின்றி பாதுகாப்புடன் கொண்டாடுவது குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை தேனி மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா வெளியட்டுள்ளார் அதில், விநாயகர் சிலை வைத்து வழிபடுவதற்கு ஆர்.டி.ஓ.விடம் அனுமதி சான்று பெற்று சிலை வைக்க வேண்டும். பீடம் மற்றும் சிலையுடன் சேர்த்து உயரம் 10 அடிக்கு மேல் இருக்க கூடாது. பிற வழிபாட்டு தலங்கள், மருத்துவமனைகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் அருகில் சிலைகள் அமைக்க கூடாது.களிமண்ணால் ஆன சிலைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். காலை 2 மணி நேரம் மற்றும் மாலை 2 மணி நேரம் மட்டுமே ஒலி பெருக்கியை பயன்படுத்த வேண்டும்.


Mark Antony Review: விஷாலை ஓரம் கட்டிய எஸ்.ஜே.சூர்யா.. கொண்டாட வைத்ததா “மார்க் ஆண்டனி” படம்?.. முழு விமர்சனம் இதோ..!




சிலை அமைக்கும் இடத்தில் அரசியல் கட்சியினரின் பெயர் பலகைகள் வைக்க கூடாது. சிலை வைத்திருக்கும் அமைப்பின் மூலம் 2 பேர் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும்.பிற மத வழிபாட்டு தலங்கள் வழியாக ஊர்வலம் செல்ல கூடாது. போலீஸ் துறை, மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் உள்ளாட்சித்துறை ஆகிய துறைகளால் அனுமதிக்கப்படும் இடங்களில் மட்டுமே சிலைகள் வைக்க வேண்டும். சிலைகள் வைக்கப்பட்டு 3 நாட்களுக்குள் கரைக்கப்பட வேண்டும்.


Mark Antony Review: விஷாலை ஓரம் கட்டிய எஸ்.ஜே.சூர்யா.. கொண்டாட வைத்ததா “மார்க் ஆண்டனி” படம்?.. முழு விமர்சனம் இதோ..!




விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது வாகனங்களில் பலகை அமைத்து அதன் மேல் சிலையை வைக்காமல், வண்டியின் தரை மட்டத்தில் மட்டுமே வைக்க வேண்டும். ேமலும் ஊர்வலத்தின் போது பட்டாசு வெடிக்க கூடாது.சிலைகளை கரைப்பதற்கு முன்பாக மாலைகள், வஸ்திரங்கள் அலங்கார பொருட்களை அகற்றி கரைக்கப்படும் இடங்களில் வைக்கப்பட்டுள்ள குப்பைத் தொட்டிகளில் மட்டும் போட வேண்டும். இந்த விதிகளை மீறுவோர் மீது அபராதம் விதிக்கப்படும். பக்தர்கள் தாங்கள் வைத்திருக்கும் விநாயகர் சிலைகளை அனுமதிக்கப்பட்ட நீர்நிலைகளில் மட்டுமே கரைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியிருந்தார்.