பெரியகுளத்தில் சவ ஊர்வலத்தில் வெடி போட்டதில் ஏற்பட்ட தகராறு காரணமாக  இளைஞர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரியகுளம் காவல்துறையினர் இளைஞரின் உடலை மீட்டு வழக்குப்பதிவு செய்து  கொலையாளியை தேடி வருகின்றனர்.


AstraZeneca: அடுத்தடுத்து வந்த சிக்கல் - உலகம் முழுவதும் கோவிஷீல்ட் தடுப்பூசியை திரும்பப் பெறும் அஸ்ட்ராஜெனிகா




தேனி மாவட்டம் பெரியகுளம் வடகரை வைத்தியநாதபுரத்தில் வசித்து வந்த முன்னாள் ராணுவ வீரர் மனோகரன் உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார். முன்னாள் ராணுவ வீரரின் சவ ஊர்வலம் நேற்று மாலையில் நடைபெற்ற பொழுது  அதே பகுதியைச் சேர்ந்த சகோதரர்களான அருண் மற்றும் சூர்யா ஆகிய இருவரும் சேர்ந்து  வெடி போடும்போது  பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் வெடி போட்டதை சவ ஊர்வலத்தில் கலந்து கொண்ட அதே பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் தட்டி கேட்டுள்ளனர். இதனால் இரு தரப்பினரிடயே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.


SRH Vs LSG, IPL 2024: சென்னை அணிக்கு சிக்கல்? பிளே-ஆஃப் வாய்ப்பிற்காக ஐதராபாத் - லக்னோ இன்று பலப்பரிட்சை




மேலும் இறந்தவரின் உடலை அடக்கம் செய்த பின்பு வெடி போட்ட அருண் மற்றும் சூர்யா ஆகிய இருவரும் தட்டிக் கேட்டவர்களை அரிவாளை கொண்டு தாக்க முற்பட்டதாகவும், வெடி போட்டபோது தட்டி கேட்ட இளைஞர்களுக்கும் சகோதரர்களான அருண் மற்றும் சூர்யா ஆகியோருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலில் அருண் என்ற இளைஞர் படுகாயம் அடைந்த நிலையில் தப்பி ஓடியதாகவும், இதனைத் தொடர்ந்து படுகாயம் அடைந்த அருணின் (அண்ணன்) சகோதரன் சூர்யா பெரியகுளம் வடகரை காவல் நிலையத்திற்கு சென்று தனது தம்பியை வெட்டி தாக்கியதாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.


Rain Alert: சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கொட்டிய கோடை மழை - மகிழ்ச்சியில் மக்கள்




இந்த நிலையில் காவல்துறையினர் சம்பவம் நடந்த இடத்தில் அருண் என்ற இளைஞரை நீண்ட நேர தேடுதலுக்கு பிறகு தப்பி ஓடி புதருக்குள் இறந்த நிலையில்  சடலமாக காவல்துறையினர் மீட்டனர். அருணின் உடலை மீட்ட காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த பின் வழக்கு பதிவு செய்து கொலைச் சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை தேடி வருகின்றனர். மேலும் கொலைச் சம்பவத்தில் பலியான அருண் மற்றும் அவரது சகோதரரான சூர்யா ஆகிய இருவர் மீதும் கொலை, கொள்ளை, கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள்  விற்பனை மற்றும் திருட்டு உள்ளிட்ட  குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.