மனைவியுடன் பேசியதால் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக கத்தியால் குத்தி கொலை செய்ய முயற்சி செய்த வழக்கில் குற்றவாளியான இளைஞருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தேனி நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.


Lunar Eclipse: பக்தர்கள் கவனத்திற்கு.. இன்று நள்ளிரவில் சந்திர கிரகணம்.. மாலையில் கோயில் நடைகள் அடைப்பு..!




தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள தேவாரம் பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன்.  திருமணம் ஆகி இரண்டு குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அவரது உறவினரான செல்வம், முருகேசனின் மனைவியிடம் தொலைபேசியில் பேசியதால் இருவருக்கும் இடையே முன் விரோதம் ஏற்பட்டுள்ளது.


இந்நிலையில் கடந்த 24.11.2021 அன்று இருசக்கர வாகனத்தில் வேலைக்குச் சென்ற முருகேசனை வழிமறித்த செல்வம், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் குத்திக் கொலை செய்ய முயற்சி செய்தார். அப்பொழுது, மார்பு பகுதியில் கத்தியால் குத்திய நிலையில், முருகேசன் அதை தடுத்ததில் முருகேசனின் கை விரல் துண்டான நிலையில், அவர் படு காயம் அடைந்துள்ளார்.


Latest Gold Silver: 46 ஆயிரத்தை கடந்த சவரன் தங்கம்; 10 நாட்களில் 1000 ரூபாய் அதிகரிப்பு - மக்கள் வேதனை




ஏடிஎம்மில் பணம் எடுத்து தருவதுபோல் நடித்து பணம் திருட்டு; வாசலிலேயே கதறி அழுத பெண்!


இதனைத் தொடர்ந்து தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முருகேசனிடம் தேவாரம் காவல்துறையினர் பெற்ற வாக்குமூலத்தின் அடிப்படையில் செல்வத்தின் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து வழக்கு விசாரணையானது. தேனி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் உள்ள முதன்மை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.


மேலும் இந்த விசாரணையில் சாட்சிகளின் அடிப்படையில் செல்வம் குற்றவாளி என தீர்மானிக்கப்பட்டு குற்றவாளி செல்வத்திற்கு ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ஆயிரம் ரூபாய் அபராதமும், அதை கட்டத் தவறினால் மேலும் ஒரு மாதம் மெய்க் காவல் சிறை தண்டனையும் விதித்து நீதிபதி சுரேஷ் தீர்ப்பு வழங்கி உள்ளார். மேலும் இந்த தீர்ப்பை அடுத்து குற்றவாளியை சிறையில் அடைக்க காவல் துறையினர் பாதுகாப்புடன் அழைத்துச் சென்றனர்.