மனைவி மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து எரித்த வழக்கில் கணவன் மற்றும் கணவனின் தாய் தந்தை உட்பட மூவருக்கும் ஆயுள் தண்டனை விதித்து தேனி மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
குடும்ப பிரச்சனை
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள பொம்மிநாயக்கன்பட்டிச் சேர்ந்த மலைச்சாமி (வயது 44) மற்றும் சங்கீதா (வயது 29) தம்பதியினர் இரண்டு பெண் குழந்தைகள், ஒரு ஆண் குழந்தை என மூன்று குழந்தைகளுடன் வாழ்ந்து வந்துள்ளனர். இந்த நிலையில் மலைச்சாமி மனைவி சங்கீதா குழந்தைகள் பள்ளி செல்ல ஆரம்பித்து விட்டதால் தான் கூலி வேலைக்கு செல்ல போவதாக கணவரிடம் தெரிவித்த போது கணவர் மறுத்துள்ளார்.
TN Weather Update: கொளுத்தும் வெயில்.. மக்கள் வெளியே வர வேண்டாம் - வானிலை மையம் எச்சரிக்கை
கொலை சம்பவம்
இதனால் தொடர்ந்து கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்படவே மலைச்சாமி, மனைவி சங்கீதாவை சந்தேகப்பட்டு தொடர்ந்து மது போதையில் சண்டையிட்டு வந்ததாகவும் எனவே கடந்த 04.12.2018 மது போதையில் வந்த கணவர் மலைச்சாமி, அவரது மனைவி சங்கீதாவை சந்தேகப்பட்டு சண்டையிட்டு அடித்து துன்புறுத்தி மலைச்சாமியின் தந்தை வீட்டிற்கு இழுத்துச் சென்று, தந்தை ராமன் (வயது 63) மற்றும் தாய் செல்வம் (வயது 55) ஆகிய மூவரும் சேர்ந்து சங்கீதாவை தாக்கி உள்ளனர். மேலும் கணவர் மலைச்சாமி வீட்டிலிருந்த மண்ணெண்ணையை எடுத்து வந்து மனைவி சங்கீதா மீது ஊற்றி தீ வைத்ததாகவும், இதற்கு மாமனார் மற்றும் மாமியார் உடந்தையாக இருந்ததாகவும், தீக்காய்களுடன் சிகிச்சையில் இருந்த சங்கீதா மரண வாக்கு மூலம் கொடுத்தார்.
கொலை வழக்கு
அதன் அடிப்படையில், கணவன் மற்றும் கணவனின் தாய், தந்தை ஆகிய மூவர் மீதும் ஜெயமங்கலம் காவல் நிலையத்தில் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணையானது தேனி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் உள்ள மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. எனவே இந்த வழக்கு விசாரணை முடிவுற்ற நிலையில், உயிரிழந்த சங்கீதாவின் மரண வாக்குமூலம் மற்றும் சாட்சியங்களின் அடிப்படையில் மூவரும் கொலை குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டு கணவர் மலைச்சாமிக்கும் அவரது தந்தை ராமன் மற்றும் தாய் செல்வம் ஆகிய மூவருக்கும் தனித்தனியே ஆயுள் தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும், மேலும் அதைக் கட்ட தவறினால் மேலும் 3 மாத மெய் காவல் சிறை தண்டனையும் விதித்து தேனி மகிளா நீதிமன்ற நீதிபதி கோபிநாதன் தீர்ப்பு வழங்கியுள்ளார். மேலும் இந்த தீர்ப்பிணைத்தொடர்ந்து குற்றவாளிகளை சிறையில் அடைக்க காவல்துறையினர் பாதுகாப்புடன் அழைத்துச் சென்றனர்