தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உடல் உபாதையை கழிக்க சாலையை கடந்த ஐயப்ப பக்தர் வேன்மோதிய விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இதுதொடர்பாக தென்கரை காவல்துறையினர் வாகன ஓட்டுநரை கைது செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.




கடலூர் மாவட்டம் திருமுட்டம் தாலுகாவில் உள்ள வலசக்காடு பகுதியைச் சேர்ந்த 30 ஐயப்ப பக்தர்கள் கடந்த 11ஆம் தேதி ஊரிலிருந்து கிளம்பி சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய இரண்டு வேன்களில் சென்றுள்ளனர். 


மக்களே உஷார்! டிசம்பர் 16, 17 தேதிகளில் தமிழகத்திற்கு ஆரஞ்சு அலர்ட்


இந்நிலையில் தரிசனம் முடித்துவிட்டு வீடு திரும்ப கையில் பெரியகுளம் அருகே உள்ள புறவழிச் சாலை வடுகபட்டி பகுதியில் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அமிர்தலிங்கம் (53) என்பவர் உடல் உபாதையை கழித்துவிட்டு மீண்டும் வாகனத்தில் ஏற சாலையை கடக்க முயன்ற போது, கோவை மாவட்டத்திலிருந்து சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு சென்று திரும்பிய டெம்போ ட்ராவலர் வேன் மோதியதில் ஐயப்ப பக்தர் அமிர்தலிங்கம் சாலையில் பல அடி தூரம் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார்.




இந்நிலையில் விபத்தை ஏற்படுத்திய டெம்போ ட்ராவலர் வேன் ஓட்டுநர் வாகனத்தை நிறுத்தாமல் ஓடிச் சென்றதால் விபத்தில் காயம் அடைந்தவர், ஐயப்ப பக்தர்களின் முன்னே சென்ற அவர்களது மற்றொரு வாகன ஓட்டுனருக்கு தெலைபேசி மூலம் தகவல் கொடுத்த நிலையில், தப்பிச் சென்ற  வாகனத்தை மடக்கி பிடித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து விபத்தில் படுகாயம் அடைந்த ஐயப்ப பக்தர் அமிர்தலிங்கத்தை உடன் வந்த பக்தர்கள் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.


Karungali Malai: எல்லோரும் கருங்காலிமாலையை அணியக்கூடாது! இவர்களுக்கு மட்டும்தான்! - ஜோதிடர் சொல்வது என்ன?




Fight Club X Review: தாறுமாறு தக்காளி சோறு.. மிரட்டும் ஃபைட் கிளப் படம்.. எக்ஸ் வலைத்தள விமர்சனம் இதோ..!


அங்கு உடலை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக தகவல் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து பெரியகுளம் தென்கரை காவல்துறையினர் விபத்தை ஏற்படுத்திய டெம்போ ட்ராவலர் வாகனத்தை ஓட்டிய பிரபாகர் (35) என்ற ஓட்டுநரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். சுவாமி தரிசனம் செய்துவிட்டு ஊர் திரும்பிய ஐயப்ப பக்தரை பின்னால் வந்த ஐயப்ப பக்தர்கள் வாகனம் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் ஐயப்ப பக்தர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.