லோகேஷ் கனரகராஜ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் ஃபைட் கிளப் படத்திற்கு பாராட்டுக்கள் குவிந்து வரும் நிலையில் ரசிகர்கள் எக்ஸ் வலைத்தளத்தில் தங்கள் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
ஃபைட் கிளப்
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ஜி ஸ்குவாட் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார். இதன் முதல் தயாரிப்பாக உருவாகி இருக்கும் படம் ஃபைட் கிளப். உறியடி படத்தை இயக்கி நடித்த விஜயகுமார் இந்தப் படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். அபாஸ் ஏ ரஹ்மத் இந்தப் படத்தை இயக்கி கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார்.
இன்று டிசம்பர் 15 தேதி திரையரங்குகளில் வெளியாகியிருக்கும் ஃபைட் கிளப் படத்தின் சிறப்பு திரையிடல் கடந்த சில தினங்களுக்கு முன் சென்னையில் நடைபெற்றது.
இந்தப் படத்தை பார்க்க நேர்ந்த விமர்சகர்கள் சமூக வலைதளங்களில் பாசிட்டிவான விமர்சனங்களைக் கொடுத்து வருகிறார்கள்.
மேலும் இந்த திரையிடலில் இயக்குநர் பிரதீப் ரங்கநாதன், நெல்சன் திலிப்குமார், ரத்னகுமார் , நடிகர் எஸ் ஜே சூரியா, சாந்தனு உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டார்கள்.
இந்நிலையில் இன்று தியேட்டரில் வெளியாகியிருக்கும் ஃபைட் கிளப் படம் பார்த்த ரசிகர்கள் தங்கள் விமர்சனங்களை சமூக வலைத்தங்களில் பதிவிட்டு வருகின்றனர். அவற்றில் சில இந்த செய்தி தொகுப்பில் இணைக்கப்பட்டுள்ளது.