தேனி மாவட்டம் 22 பேரூராட்சியில் கொண்டுள்ளது. இந்தப் பேரூராட்சிகளில் எல்இடி பல்பு வாங்கியதில் முறைகேடு தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் கடந்த 10ஆம் தேதி அன்று வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். தேனி 11 பேரூராட்சிகளில் கடந்த 2019/20 ஆம் ஆண்டுகளில் தேனி மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகளுக்கு எல்.இ.டி.பல்புகள் வாங்கியதில் ஒரு கோடி ரூபாய் வரை ஊழல் நடந்திருப்பதாக கூறி தேனியைச் சேர்ந்த சரவணன் என்பவர் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில்.
நீதிமன்ற உத்தரவுப்படி முன்னாள் பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் விஜயலட்சுமி மற்றும் 11 பேரூராட்சி செயல் அலுவலர்கள் மீது தேனி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறைக்கு வழக்குப் பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவின் பேரில் தேனி லஞ்ச ஒழிப்பு போலீசார் 11 பேரூராட்சி செயல் அலுவலர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்த நிலையில் இது தொடர்பாக கடந்த 2019 -20 ல் பேரூராட்சியில் நடந்த ஒரு கோடியே 29 லட்சத்து 83 ஆயிரத்து 100 ரூபாய் ஊழல் சம்பந்தமாக உதவி இயக்குனர் விஜயலட்சுமி, ஆண்டிபட்டி பேரூராட்சி செயல் அலுவலர் பாலசுப்பிரமணி, தென்கரை பேரூராட்சி செயல் அலுவலர் மகேஸ்வரன், வீரபாண்டி பேரூராட்சி செயல் அலுவலர் செந்தில்குமார், க.புதுபட்டி பேரூராட்சி செயல் அலுவலர் ஆண்டவர், உத்தமபாளையம் பேரூராட்சி செயல் அலுவலர் எஸ். பாலசுப்ரமணி, கோம்பை பேரூராட்சி செயல் அலுவலர் ஜெயலட்சுமி, மேல சொக்கநாதபுரம் பேரூராட்சி செயல் அலுவலர் மணிகண்டன், பூதிப்புரம் பேரூராட்சி செயல் அலுவலர் கார்த்திகேயன், தேவதானப்பட்டிப் பேரூராட்சி செயல் அலுவலர் கணேஷ், ஓடைப்பட்டி பேரூராட்சி செயலாளர் பசீர் அகமது ஒப்பந்ததாரர்கள் ஜமுனா, ரவி ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் தேனி மாவட்டத்தில் உள்ள 22 பேரூராட்சிக்கு தேவையான எலக்ட்ரிக் பொருட்களை வழங்கிவந்த கம்பம் புதுப்பட்டி சேர்ந்த KMPL எலக்ட்ரிக்கல் உரிமையாளர் ரவி மற்றும் அவருடைய மனைவி ஜமுனா ஆகிய இருவர் மீதும் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்