தமிழக கேரள எல்லை மாவட்டங்களில் முக்கிய மாவட்டமாக பார்க்கப்படும்  தேனி மாவட்டம் இரு மாநில எல்லையோர மாவட்டமாக இருப்பதால் போதை பொருட்கள் கடத்தல் , கனிமவள திருட்டு  போன்ற சட்டவிரோத செயல்கள் அதிகளவில் நடந்து வருகிறது. இந்த நிலையில் இதனை தடுக்கும் வகையில் காவல் துறையும் செயல்பட்டு குற்றவாளிகளை தண்டிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.



அந்த வகையில்  தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவீன் உமேஷ் டோங்கரே உத்தரவின்பேரில், மாவட்டத்தில் கஞ்சா விற்பனை, போக்சோ குற்றங்கள், திருட்டு மற்றும் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளில் ஈடுபடும் நபர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக கஞ்சா விற்பனையை முற்றிலும் ஒழிக்கும் வகையில் கஞ்சா வியாபாரிகள் மீது தொடர்ந்து கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 



இந்த நிலையில்தான் தேனி அல்லிநகரம் காவல் நிலையத்தில் பணியாற்றும் காவலர்கள் சிலர் கஞ்சா வியாபாரிகளுடன் தொடர்பு வைத்துக் கொண்டு சட்டவிரோதமான செயலில் ஈடுபட்டதாக தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவீன் உமேஷ் டோங்கரேவுக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. இதையடுத்து அல்லிநகரம் காவல் ஆய்வாளர் ராஜேஷ்கண்ணன் மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறைக்கும், காவலர்கள் ராஜா, ஸ்ரீதர், வாலிராஜன் ஆகிய 3 பேரை ஆயுதப்படை பிரிவுக்கும் தற்காலிக பணி இடமாற்றம் செய்து தேனி எஸ்பி உத்தரவிட்டார். மேலும் இதுகுறித்து காவல் கண்காணிப்பாளர் விசாரணை நடத்தினார்.



அதில், கஞ்சா வியாபாரி ஒருவரை கைது செய்வதற்காக, மற்றொரு கஞ்சா வியாபாரியிடம் இருந்து போலீசாரே கஞ்சாவை கேட்டு வாங்கியதாகவும், அவ்வாறு வாங்கிய கஞ்சாவை காவலர்கள் ராஜா, தனது வீட்டில் வைத்து இருந்ததாகவும் தெரியவந்தது. இதனால் காவலர்கள் ராஜா கடந்த மாதம் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார். ஆய்வாளர் ராஜேஷ் கண்ணன் மீதான குற்றச்சாட்டு குறித்து தென் மண்டல காவல்துறை ஐ.ஜி. அஸ்ரா கார்க்குக்கு தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிக்கை அளித்தார். அதன்பேரில் ஆய்வாளர் ராஜேஷ்கண்ணனை நெல்லை மாவட்டத்துக்கு பணி இடமாற்றம் செய்து தென்மண்டல காவல் துறை ஐ.ஜி. அஸ்ரா கார்க் உத்தரவிட்டார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண