நெசவாளர்களுக்காக கோ-ஆப்டெக்ஸில் ஆடைகளை வாங்குங்கள்

நெசவாளர்களின் நலன் கருதி கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தின் ஆடைகளை வாங்கி பயன்படுத்த வேண்டும் என்ற வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Continues below advertisement

தேனி மாவட்டம், தேனி-அல்லிநகரம் நகராட்சிக்குட்பட்ட கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில், தீபாவளி பண்டிகை சிறப்பு தள்ளுபடி விற்பனையினை  மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.வி.ஷஜீவனா குத்துவிளக்கேற்றி வைத்து துவக்கி  வைத்தார்.

Continues below advertisement

கோ-ஆப்டெக்ஸ் என அனைவராலும் அழைக்கப்படும் தமிழ்நாடு நெசவாளர் கூட்டுறவு சங்கம், 1935-ஆம் ஆண்டில் துவங்கப்பட்டு தொடர்ந்து 89 ஆண்டுகளாக தமிழ்நாட்டிலுள்ள கைத்தறி நெசவாளர்களுக்கும், வாடிக்கையாளர்களுக்கும் சிறப்பான முறையில் சேவை புரிந்து வருகிறது. இந்தியாவிலுள்ள கைத்தறி நிறுவனங்களிலேயே முதன்மை நிறுவனமாக கோ-ஆப்டெக்ஸ் திகழ்வதற்கு, நெசவாளர்களின் ஒத்துழைப்பும், வாடிக்கையாளர்களின் பேராதரவும் தான் முக்கிய காரணியாக விளங்கி வருகிறது.

செந்தில் பாலாஜிக்கு மீண்டும் அமைச்சர் பதவி? - அமைச்சர் மா.சுப்பிரமணியன் சொன்ன பதில் என்ன?


கைத்தறி ரகங்களின் விற்பனையை அதிகரிக்க தமிழக அரசு ஆண்டுதோறும் பண்டிகை காலங்களில் 30 சதவீதம் சிறப்புத் தள்ளுபடியினை வழங்கி வருகிறது. அதனடிப்படையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டு, கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்களில் காஞ்சிபுரம், ஆரணி, சேலம் திருப்புவனம் பட்டு சேலைகள், கோவை மென்பட்டு சேலைகள், பட்டு வேட்டிகள், கைத்தறி சுங்குடி சேலைகள்,  காஞ்சி காட்டன்,  செட்டிநாடு காட்டன்,  கோவை கோரா காட்டன், சேலம் காட்டன், பரமக்குடி காட்டன், திண்டுக்கல் காட்டன் மற்றும் அருப்புகோட்டை காட்டன் சேலைகள் புதிய வடிவில் ஏராளமாக  தருவிக்கப்பட்டுள்ளன.  மேலும் நவீன யுக ஆடவர்களை கவரும் விதமாக காட்டன் சட்டை இரகங்கள்/ பருத்தி  (Linen/Cotton)  சட்டைகள் லுங்கிகள் மற்றும் வேட்டிகள் உள்ளன. மகளிருக்காக சுடிதார் இரகங்கள், நைட்டிகள் மற்றும் குர்தீஸ்கள் கண்ணைக் கவரும் வண்ணங்களில் வாடிக்கையாளர்களுக்காக தருவிக்கப்பட்டுள்ளது.

ஒரே கிராமத்தில் 150 ஏக்கர் பரப்பளவில் சாமை சாகுபடி - நல்ல மகசூல், வருவாய் ஈட்டும் விவசாயிகள்


தேனி மாவட்டத்தில் உள்ள தேனி, பெரியகுளம் ஆகிய இரண்டு விற்பனை நிலையத்தில் கடந்த ஆண்டு தீபாவளி விற்பனை 61.28 இலட்சங்கள் ஆகும்.  தீபாவளி 2024 விற்பனை குறியீடாக 85.00 இலட்சங்கள் நிர்ணயிக்கப் பட்டுள்ளது. கோ-ஆப்டெக்ஸ் ஜவுளி இரகங்களை மின் வணிக வலைதளமான www.cooptex.gov.in  என்ற  இணைய தளத்தின்  மூலமும்  பெற்றுக்  கொள்ளலாம். கோ-ஆப்டெக்ஸில் மாதாந்திர சேமிப்பு திட்டமும் நடைமுறையில் உள்ளது. எனவே, நமது மாவட்டத்தைச் சார்ந்தவர்கள் நெசவாளர்களின் நலன் கருதி கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தின் ஆடைகளை வாங்கி பயன்படுத்த வேண்டும் என்ற வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Continues below advertisement
Sponsored Links by Taboola