தமிழக - கேரள எல்லை மாவட்டங்களில் முக்கிய மாவட்டமாக பார்க்கப்படும் தேனி மாவட்டம் இரு மாநில எல்லையோர மாவட்டமாக இருப்பதால் போதை பொருட்கள் கடத்தல், கனிமவள திருட்டு  போன்ற சட்டவிரோத செயல்கள் அதிகளவில் நடந்து வருகிறது. இந்த நிலையில் இதனை தடுக்கும் வகையில் காவல் துறையும் செயல்பட்டு குற்றவாளிகளை தண்டிக்கும் வகையில் நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது.


பொங்கல் பண்டிகை வேட்டி, சேலை திட்டத்திற்கு பருத்தி நூல் வாங்க தமிழ்நாடு அரசு டெண்டர் அறிவித்துள்ளது.




அந்த வகையில், தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவீன் உமேஷ் டோங்கரே உத்தரவின்பேரில், மாவட்டத்தில் கஞ்சா விற்பனை, போக்சோ குற்றங்கள், திருட்டு மற்றும் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளில் ஈடுபடும் நபர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.


குறிப்பாக கஞ்சா விற்பனையை முற்றிலும் ஒழிக்கும் வகையில் கஞ்சா வியாபாரிகள் மீது தொடர்ந்து கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி, தேனி மாவட்டத்தில்  கஞ்சா வியாபாரிகள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.


Crime: “குடிக்கும்போது எப்போதும் ஒருமையில் திட்டுவார்” - பைனான்ஸ் ஊழியரை போட்டுத்தள்ளிய நண்பர்கள்




இந்த நிலையில் ஆந்திர மாநிலத்தில் இருந்து கம்பத்திற்கு கஞ்சா கடத்தப்படுவதாக கம்பம் வடக்கு காவல் நிலைய போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் காவல் ஆய்வாளர் விஜயானந்த் தலைமையில் போலீசார் கம்பம் கோம்பை ரோடு தெருவில் ரோந்து சென்றனர். அப்போது நாககன்னி அம்மன் கோயில் அருகே சந்தேகப்படும்படியாக மோட்டார் சைக்கிளில் சாக்குப்பையுடன் நின்றிருந்த 4 பேரை போலீசார் மடக்கி பிடித்து சோதனை செய்தனர்.




அதில் அவர்கள் வைத்திருந்த சாக்குப்பையில் 10 கிலோ கஞ்சா இருந்தது. பின்னர் அதனை பறிமுதல் செய்த போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள், கோம்பைரோடு தெருவை சேர்ந்த ருத்ரன் (26), ஞானேசன் (44), அலெக்ஸ் பாண்டியன் (24), நெல்லு குத்தி புளியமரம் தெருவை சேர்ந்த ஈஸ்வரன் (48) என்பதும், ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி வந்ததும் தெரியவந்தது.


Tomato Flu: குழந்தைகள் கவனம்! இப்படியெல்லாம் இருந்தால் தக்காளி காய்ச்சல்! உடனடியாக செய்ய வேண்டியது இதுதான்!


இதையடுத்து போலீசார் 4 பேரையும் கைது செய்தனா். மேலும் அவர்களிடம் இருந்து கஞ்சா கடத்தலுக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் மற்றும் 3 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுபோன்று கஞ்சா கடத்தலில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தேனி மாவட்ட காவல் துறை எச்சரிக்கையும் விடுத்துள்ளது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண