தென் மாவட்டங்களில் மிக முக்கியமான மருத்துவமனையாக விளங்க கூடியது மதுரை அரசு ராசாசி மருத்துவமனை. மதுரை மட்டுமில்லாமல் சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், திண்டுக்கல் உள்ளிட்ட பல மாவட்ட மக்கள் அரசு ராசாசி மருத்துவமனையால் பயன்பெறுகின்றனர். தனியார் மருத்துவமனைகளில் கூட செய்ய முடியாத பல்வேறு முக்கிய அறுவை சிகிக்களை வெற்றிகரமாக செய்யப்பட்டுவருகிறது. கொரோனா காலகட்டத்தில் அதிகளவு தொற்று பாதிக்கப்பட்டிருந்த நிலையில் பலரும் விரைவாக குணமடைந்து வீடு திரும்பினர்.
இதை சற்று கவனிக்கவும் - *Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெறhttps://bit.ly/2TMX27X*
சமீபத்தில் தென் தமிழ்நாட்டில் முதன்முறையாக திருநம்பிகளுக்கான அறுவை சிகிச்சையை மருத்துவர்கள் மேற்கொண்டுள்ளனர். மதுரையை சேர்ந்த 2 பட்டதாரி இளம்பெண்கள் தோற்றத்தில் திருநம்பிகளாக இருந்து வந்த நிலையில் இருவருக்கும் மாற்று பாலினத்தவர்களுக்கான அறுவை சிகிச்சையை மேற்கொண்டு திருநம்பிகளாக மாற்றி மதுரை அரசு ராசாசி மருத்துவமனை சாதனை படைத்தது. இதற்காக மதுரை மருத்துவக்கல்லூரி முதல்வர் ரத்தினவேலுக்கு பாராட்டுக்கள் குவிந்த்தது.
தமிழ்நாட்டில் கொரோனா முதல் அலை பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கியது தொடர்ந்து தென் மாவட்டத்தில் முதன்முறையாக மதுரை அரசு ராசாசி மருத்துவமனைக்கு கீழ் உள்ள வளாகத்தை கொரோனா சிறப்பு மருத்துவமனையாக மாற்றி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது, அதனைத் தொடர்ந்து கடந்த 2019ஆம் ஆண்டு முதல் தற்போது வரை கொரோனாவிற்கு சிகிச்சை அளிக்கும் வகையில் பிரத்தியோக மருத்துவமனையாக செயல்பட்டு வருகிறது, இந்த நிலையில் புதியதாக மதுரை அரசு ராசாசி மருத்துவமனையில் முதல்வராக பொறுப்பேற்றார் ரத்தினவேல் அவர்களுக்கு மருத்துவமனையிலிருந்து பொருட்கள் அதிக அளவு திருடப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது,
இதற்காக ஒரு குழு நியமிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அரசு ஒதுக்கீடு செய்யப்பட்ட பொருட்களில் தற்போது உள்ள பொருட்களை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டார், அதனை தொடர்ந்து மற்ற பொருட்கள் அனைத்தையும் திருடப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது,அதனை பொருட்களை யார் திருடியது என்பது குறித்து முதல்வர் ரத்தனவேல் அளித்த புகாரை தொடர்ந்து தல்லாகுளம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து மருத்துவமனையில் உள்ள சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.