தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் டாக்டர் சி.சைலேந்திரபாபு மதுரை தெப்பக்குளம் தியாகராஜர் கல்லூரியில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். 

 





அப்போது பேசிய அவர்,  “கடந்த 10 ஆண்டுகளில் 80 காவல்நிலைய மரணங்கள் நிகழ்ந்து உள்ளன. இதில் 2018ல் அதிகமாக 18 காவல் மரணங்கள் நிகழ்ந்து உள்ளன. 2021ல் 4, 2022ல் 2 காவல் நிலைய மரணங்கள் மட்டுமே நடைபெற்று உள்ளன. தமிழக முதல்வர் காவல்நிலைய மரணங்கள் இருக்கக் கூடாது. அதனை நடைமுறை படுத்தக் காவல்துறையினர் செயல்பட வேண்டும்.

 





தவறு செய்யாமலேயே சில நேரங்களில் காவல்துறையினர் மீது புகார் வருகின்றன. சிலர் உடல்நலக் குறைவுகள், தற்கொலை செய்து கொள்வர். ஆனால் அது காவல்துறை மீதான குற்றம்சாட்டாக கூறப்படும். தமிழ்நாடு காவல்துறை பாரம்பரிய மிக்க காவல்துறை.



யாரையும் துன்புறுத்த மாட்டார்கள். அங்கொன்றும் இங்கொன்று நிகழும். அதையும் நடைபெறாமல் இருக்க வேண்டும் என  அறிவுறுத்தி வருகிறோம். காவல்துறை அரசாங்கத்தின் அங்கம், சட்டத்தின் பார்வையில் இருக்கிறது. சட்டத்திற்கும், மனசாட்சிக்கு உட்பட்டு, காவல் கோட்டுபாட்டுக்கு உட்பட்டு காவல்துறை செயல்பட வேண்டும்.



 







ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண