கம்பம் அருகே உள்ள சுருளிப்பட்டியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை கொண்டாடும் விதமாக நடைபெற்ற ரேக்ளா ரேஸ் பந்தயத்தில் கலந்து கொண்ட மாட்டு வண்டி உரிமையாளர் உடன் வந்தவருக்கும் காவல் துறையினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் இருவர் கைதான சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு.
ஆண்டிபட்டி எம்.எல்.ஏ மகாராஜன் முன்னிலையில் நடைபெற்ற இந்த மோதலில் விழா மேடையில் அமர்ந்திருந்து எம்எல்ஏ வேடிக்கை பார்த்த சம்பவம் பார்த்தவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளி பட்டியில் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு அதனை கொண்டாடும் விதமாக இரட்டை மாட்டு வண்டி எல்கை பந்தயம் ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ மகாராஜன் தலைமையில் நடைபெற்றது. இந்த மாட்டு வண்டி பந்தயத்தில் சுமார் 150-க்கும் மேற்பட்ட ஜோடி மாடுகள் பங்கேற்று பந்தயம் நடத்தப்பட்டது.
இதையும் படிங்க : Senthil Balaji ; போட்றா தம்பி பந்தை! வாலிபால் விளையாடிய அமைச்சர். கை தட்டி வரவேற்ற மாணவர்கள்
இந்த பந்தயத்தில் இறுதிச்சுற்றாக கரிச்சான் மாட்டு பந்தயம் நடைபெற்றது . இதில் இரண்டு மாட்டு வண்டிகள் வந்து கொண்டிருந்த போது ஒன்றுக்கொன்று உரசிக்கொண்டு சென்றுள்ளது. இதில் இரு மாட்டு வண்டி ஓட்டி வந்த சாரிகளுக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டு தேவாரம் பகுதியைச் சார்ந்த ராஜா என்ற வண்டி ஓட்டி வந்த சாரதி கீழே விழுந்துள்ளார். இதில் அவருக்கு காயம் ஏற்பட்டு சிகிச்சைக்காக கம்பம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
இதற்கிடையே அவரது உறவினரான ஹரிஹரன் என்பவர் பந்தயம் நடைபெறும் இடத்திற்கு வந்து அங்கு விழா கமிட்டியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு வந்த நிலையில் அவரை சமாதானப்படுத்தும் வகையில் காவல்துறையினர் வந்து கிளம்பிச் செல்லுமாறு கூறினர். தொடர்ந்து கேட்காமல் சத்தம் போட்டுக் கொண்டிருந்தார். ஹரிஹரனை காவல்துறையினர் அங்கிருந்து வெளியேற்ற முற்படும் போது திடீரென ஹரிஹரன் காவல்துறையினரை சட்டையை பிடித்து தாக்கினார் . இதனால் காவலர்கள் அவரை தாக்க அந்த இடத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது .
பின்னர் காவல்துறையினர் ஹரிகரனை சுத்தி வளைத்து பிடித்து அருகே உள்ள ராயப்பன் பட்டி காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காவல்துறையினர் மற்றும் தனி நபர் இடையே ஏற்பட்ட இந்த மோதல் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்தின்போது இரட்டை மாட்டு வண்டி பந்தயத்தை துவக்கி வைத்து விழா மேடையில் அமர்ந்திருந்த ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் முன்னிலையில் காவல்துறையினர் சீருடைய பிடித்து அடிக்க முற்பட்டவர் மற்றும் அவருடன் வந்தவர்கள் காவல்துறையினர் மீது தாக்குதலில் ஈடுபட முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் விழா மேடையில் அமர்ந்திருந்த சட்டமன்ற உறுப்பினர் அங்கு இருந்து நழுவி சென்றது மாட்டு உரிமையாளர்களிடமும் பார்வையாளர்களிடமும் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.