தேனி மாவட்டம் அல்லிநகரத்தைச் சேர்ந்த ஓவியர் தாமோதரன்- அமுதா தம்பதியின் மகள் உதய கீர்த்திகா. இவர் தனது தாய் தந்தையுடன் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். ஏழ்மையான குடும்பம் போதுமான வருவாய் இன்றியும், இவர் தந்தை கிடைக்கும் வேலை செய்து அதில் கிடைக்கும் சொற்ப வருமானத்தை மட்டுமே நம்பி  வாழ்ந்து வருகிறார்.  மிகுந்த ஏழ்மையான குடும்ப நிலையிலும் தனது மகளின் கனவுக்காக தொடர்ந்து போராடி வரும் தாய் மற்றும் தந்தை இவர்களால் போலந்து நாட்டில் நடந்த விண்வெளி வீராங்கனை பயிற்சியை நிறைவு செய்துள்ளார் உதய கீர்த்திகா. இவர் இந்தியாவின் ககன்யான் திட்டத்தில் சேர்வதே  தனது இலக்கு என்றும் இந்தியாவுக்காக விண்வெளிக்கு செல்வது தனது கனவு என்றும் பெருமிதம் கொள்கிறார்.



பிளஸ் 2 முடித்த பின் உக்ரைன்  நாட்டில் உள்ள காக்யூ நேசனல் ஏர்போர்ஸ் பல்கலைக்கழகத்தில் ஏர் க்ராப்ட் மெயிண்டனன்ஸ் இன்ஜினியரிங் என்கிற வின்வெளி பொறியியல் பட்டப்படிப்பை முடித்துள்ளார்.  அதே பல்கழைகழகத்தில் இறுதி ஆண்டு தேர்வில் 92.5 சதவீத மதிப்பெண் பெற்று முதல் தரத்தில் தேர்வாகியுள்ளார்.  அதற்கு பின்பு  போலாந்து நாட்டிற்கு சென்று அனலாக் அஸ்ட்ரோனெட் ட்ரெய்னிங் செண்டரில் விண்வெளி வீரர்களுக்கான  பத்து வகையான பயிற்சிகள் மேற்கொண்டார்.  காற்று மண்டலத்தில் மிதத்தல், கடலுக்கு அடியில் ஆக்ஸிஜன் சிலிண்டருடன் நீந்துதல் ,விண்வெளியில் இருந்து பாராசூட் மூலம் குதித்து ராக்கெட்டில் பயணம் செய்தல் உள்ளிட்ட  10  வகையான  பயிற்சிகளை முடித்த விண்வெளி வீராங்கனையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். தான் இஸ்ரோவின் ககன்யான் திட்டத்தில் சேர்ந்து இந்தியாவிற்காக விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் தான் சாதனை செய்யப் போவதாக உறுதி கூறியுள்ளார்.



ஏழ்மையிலும் சாதனை படைக்க துடிக்கும் இந்த மாணவி வின்வெளிக்கு செல்ல பயிற்சியில் 11வது பயிற்சியாக கனடாவில் உள்ள ஹால்ஸ் ஏர் அகாடமியில்  விமான ஓட்டுதல் பயிற்சிக்கு செல்ல தனக்கு போதுமான நிதி இல்லை எனவும் மிகுந்த வேதனை அடைந்துள்ளார். கிடைக்கும் வருவாயில் குடும்பத்தை நடத்தி வரும் சூழலில் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளதாக கூறுகின்றார் மாணவி உதய கீர்த்திகாவும் அவரது பெற்றோரும்.



இதுகுறித்து உதயகீர்த்திகா கூறுகையில், " கனடாவில் உள்ள பைலட் பயிற்சி மையத்தில் சேர அனுமதி கிடைத்துள்ளது. அங்கு செல்ல 50 லட்சம் வரை தேவைப்படும். இத்தகைய பணத்தை புரட்ட முடியாத நிலையில் உள்ளேன்.  விண்வெளியில் இருக்கும் போது எவ்வாறு நடந்து கொள்வது, விண்வெளியில் எவ்வாறு தரையிறங்குவது, எந்த இடத்தை தரையிறங்குவது, எந்த இடத்தை தரையிறங்க தேர்வு செய்வது, விண்வெளியில் இருக்கும் சமயங்களில் உடல்நிலையை எவ்வாறு சீராக வைத்து கொள்வது உள்ளிட்ட பயிற்சிகள் கனடாவிலுள்ள பயிற்சி மையத்தில் வழங்கப்படும். 



இந்தப் பயிற்சியை முடித்த பின்னர் அடுத்த கட்ட பயிற்சிகளுக்கு பிறகு விண்வெளி வீராங்கனையாக தேர்வு செய்ய வாய்ப்புகள் கிடைக்கும். இந்த நிலையில்தான் இந்த பயிற்சியில் சேருவதற்கு சுமார் 50 லட்சம் ரூபாய் வரை தேவைப்படும் நிலையில்,  இந்த பயிற்சியை பெற பணம் இல்லாமல் தவித்து வருகிறோம் எனவும் சமூக ஆர்வலர்கள் கொடுத்த 4 லட்சம் பணத்தையும் கொரோனாவால் உணவின்றி தவிப்போருக்கு உதவியதால், தற்போது மத்திய மாநில அரசுகள் தனக்கு உதவினால் கல்பனா சாவ்லாவுக்கு அடுத்து விண்வெளி வீராங்கனையாக தேர்வு செய்யப்படுவேன் என கூறியுள்ளார்.