திண்டுக்கல் மாவட்டம் பழனியில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு நெஞ்சில் துப்பாக்கி தோட்ட பாய்ந்த நிலையில் கார்த்தி என்பவர் பழனி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் துப்பாக்கி சூடு சம்பவம் நடைபெற்ற பெத்தநாயக்கன்பட்டி தோட்டத்தில் விசாரணை நடத்தினர்‌. அப்போது தோட்டத்து சாலையில் இருந்து 16 ஏர்கன் துப்பாக்கி தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டன.


TN Electricity Board : அப்போ 60 கால்ஸ்.. இப்போ 75 கால்ஸ்.. தமிழ்நாடு மின்வாரியம் அளித்த அதிரடி அறிவிப்பு..



இதில் தோட்டத்தை குத்தகைக்கு எடுத்த கும்பகோணத்தை சேர்ந்த மோகன்ராஜ் மற்றும் அவரது நண்பர் கிருஷ்ணமூர்த்தி ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்‌. இந்நிலையில் துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “பெத்தநாயக்கன்பட்டி பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் எதிர்பாராத விபத்து. துப்பாக்கி தோட்டா பாய்ந்த கார்த்தி மற்றும் மோகன்ராஜ் இருவரும் ஒரே ஊரை சேர்ந்தவர்கள்., மோகன்ராஜ்க்கு சொந்தமான ஏர்கன் எனப்படும் துப்பாக்கியை  பயன்படுத்திய பொழுது எதிர்பாராத விதமாக துப்பாக்கி வெடித்து கார்த்தியின் நெஞ்சுப்பகுதியில் தோட்டா பாய்ந்தது.


TET appointment: அதிரடி அறிவிப்பு.. ‘இவர்களுக்கெல்லாம் டெட் தேர்வு தேவையில்லை’- பள்ளிக்கல்வித்துறை அப்டேட் இதுதான்..



இந்த உண்மையை வெளியே சொல்லாமல் மறைத்து, யாரோ சுட்டதாக பொய்யான தகவலை போலீசாரிடம் தெரிவித்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும் இவர்கள் பயன்படுத்திய துப்பாக்கி லைசென்ஸ் தேவையில்லாத துப்பாக்கி. சாதாரண விளையாட்டு துப்பாக்கியை வேட்டையாடுவதற்காக சிறு சிறு மாற்றங்கள் செய்துள்ளனர்” என தெரிவித்தார். இதையடுத்து மோகன்ராஜ் மற்றும் அவரது நண்பர் பழனியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி ஆகிய இருவரையும் கைது செய்துள்ளதாகவும், காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கார்த்தி மீது இரு கொலை வழக்குகள் பதியப்பட்டு தற்போது ஜாமீனில் வெளியே உள்ளதும் தெரியவந்துள்ளதாகவும் தெரிவித்தார்.


Rambha car accident: ‛அடக்கடவுளே... பாதுகாப்பா இரு ரம்பா...’ அடுத்தடுத்து ஆறுதல் கூறும் மீனா... சினேகா மற்றும் பலர்!


தற்பொழுது துப்பாக்கியை கவனக்குறைவாக பயன்படுத்தி ஒருவரை காயம் செய்ததாக வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்துள்ளதாகவும்,மேலும் இவ்வழக்கில் வேறு யாரேனும் சம்பந்தப்பட்டுள்ளார்களா என்று முழுமையாக விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவித்தார். பேட்டியின் பொழுது ஏடிஎஸ்டி சந்திரன் பழனி டிஎஸ்பி சிவசக்தி ஆகியோர் உடன் இருந்தனர்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண