மதுரை மாவட்டம் ஊமச்சிகுளம் அருகில் உள்ள கற்பக விநாயகர் நகர் பகுதியை சேர்ந்தவர் ஆத்மராவ்-சுமதி தம்பதியின் மகள் அம்ரீதாவுக்கும் பாலக்குமாருக்கும் மதுரை பாலரெங்காபுரம் பகுதியில் அமைந்துள்ள தனியார் திருமண மகாலில் இன்று திருமணம் நடைபெற்றது. இந்த திருமண விழாவில் உறவினர்கள் மற்றும் விருந்தினர்கள் பரிசாக கொண்டுத்த மொய் பணத்தை ஆதரவற்ற குழந்தைகளுக்கு தர உள்ளதாக ஆத்மாராவ் கூறி உள்ளது அப்பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
இது குறித்து மணமகளின் தந்தை ஆத்மராவ் கூறுகையில், "இறைவன் கொடுத்த வாழ்க்கையில பெரிய அளவில் யாருக்கும் உதவி பண்ண வாய்ப்பு அமையல. இதன் வருத்தம் நீண்ட வருடமாக இருந்தது. இந்நிலையில் என் மகள் திருமணத்துக்கு வரும் மொய்ப்பணத்தை அப்படியே ஆதரவற்றோர் குழந்தைகள் இல்லத்துக்கு கொடுக்கனும்னு ஆசைப்பட்டேன்.
குடும்ப உறுப்பினர்கள் முதல்ல இதில் ஆர்வம் காட்டவில்லை. பின்பு அவங்களிடம் பேசி ஓத்துக்க வைத்தேன். இத நான் பப்பளிசிட்டிக்காக பண்ணல, ஆதரவற்றோர் மீதான அக்கறையாலும் அதனால் ஏற்படுகிற மனத்திருப்திக்காகவும்தான். இதைப்பார்த்து இன்னும் பல பேர் ஆதரவற்றோர்களுக்கு உதவ முன் வரணும் என்கிற எண்ணம்தான். எவ்வளவு மொய்ப்பணம் வந்தாலும் அதை மொத்தமா கொடுக்கப் போறோம்." என தெரிவித்தார்.
இதை படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Madurai High Court: அரசு ஊழியர்கள் பணி நேரத்தில் செல்போன் பயன்படுத்தவோ வீடியோ எடுக்கவோ கூடாது - மதுரை உயர்நீதிமன்றம்