திண்டுக்கல் மேற்கு மாவட்ட அமமுக தகவல்தொழில்நுட்ப மகளிரணி செயலாளர் ரஞ்சிதம் இல்ல திருமண விழா வரவேற்பு நிகழ்ச்சி மதுரை நாகமலைபுதுக்கோட்டை பகுதியில் உள்ள மாஸ்டர் மஹாலில் நடைபெற்றது. இதில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நேரில் கலந்துகொண்டு மணமக்களை ஆசிர்வதித்து வாழ்த்து தெரிவித்தார்.
இதனையடுத்து நிகழ்ச்சி மேடையில் பேசிய அ.ம.மு.க. பொதுச்செயலாளர் தினகரன் மணமக்களை வாழ்த்தி பேசினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது..,” பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் ஊழல் நடைபெறுவதாக செய்திகளில் வெளிவருகிறது. போடாத ரோடுகளுக்கு கூட பணம் பெறுகின்றனர். தி.மு.க., என்றாலே ஊழல் என்பதை தான் இது காட்டுகிறது. அனைத்து மதத்தினருக்கும் நடுநிலையாக இருப்பது தான் ஒரு கட்சியின் , ஆனால் மதசார்பற்ற கட்சி என கூறிக்கொண்டு இந்து மதத்திற்கு எதிராக பேசிவருகிறது தி.மு.க. தேர்தலின் போது அளித்த எந்த வாக்குறுதிகளையும் தி.மு.க., அரசு நிறைவேற்றவில்லை. தி.மு.க.,விற்கு கூட்டணி பலம் இருந்தாலும் நாடாளுமன்ற தேர்தலில் பாடம் புகட்டி தோல்வியை தருவார்கள்.
2023ல் அமமுகவின் தேர்தல் வியூகம் வெளிப்படும், ஜெயலலிதா மறைவிற்கு பின் ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ்.,யிடம் அதிகாரம், பணத்தை நம்பி மட்டும் தான் அவர்களுடன் சிலர் இருந்தனர். அதிமுக நீதிமன்றத்தின் மூலம் செயல்படாமல் இருப்பதற்கு ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ்.,சே காரணம், ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ் பிரச்னையால் தமிழகத்தில் அமமுக எதற்காக தொடங்கப்பட்டது என்பதை புரியவைத்துள்ளது. ஜல்லிக்கட்டு வழக்கில் தமிழக அரசு சரியான முறையை கையாண்டு தமிழக மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற வேண்டும்” என்றார்
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - குழந்தைகளுக்கு விலையில்லா ரொட்டி, பால், முட்டை ஒரு வருடம் வழங்க முடிவு ; விஜய் ரசிகர்களின் அசத்தில் திட்டம் !