தேனி மாவட்டம் உத்தமபாளையம் கம்பம் அருகே இந்திய ராணுவத்திற்கு வேலையை சென்றவர் கடந்த 14 ஆண்டுகள் ஆகியும் வீடு திரும்பாததால் அவரை கண்டுபிடித்து தர தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



தேனி மாவட்டம் கோம்பை பண்ணைப்புரம் அருகே, பட்டாளம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பெருமாள்-ராஜம்மாள் தம்பதியின் மூத்த மகன் ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இவர்களது இரண்டாவது மகன் ராமசாமியும் கடந்த 1996 ஆம் ஆண்டு டிசம்பர் 28 தேதி பஞ்சாபில் உள்ள 40 மீடியம் ரெஜிமென்ட் பணியில் சேர்ந்தவர். இவர் பலமுறை விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்து சென்றுள்ளதாக கூறப்படுகிறது. கடைசியாக கடந்த 2005ஆம் ஆண்டு நவம்பரில் விடுமுறைக்கு ஊருக்கு வந்துவிட்டு மீண்டும் பணிக்கு திரும்பியுள்ளார்.




இந்நிலையில் கடந்த 2006 மார்ச் 7ஆம் தேதி ஜம்மு காஷ்மீரில் இருந்து அசாம் மாநிலத்தின் அடர்ந்த வனப்பகுதியில் பாதுகாப்பு பணிக்காக சென்றவர் அதன் பின்னர் காணாமல் போனதாக கூறப்படுகிறது. இது குறித்து ராமசாமி சொந்த ஊருக்கு வந்து வந்ததாக கூறி ராணுவத்திலிருந்து பெற்றோருக்கும், மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கும் தகவல் அனுப்பப்பட்டுள்ளது. அதன்படி தேனி மாவட்டம் கோம்பை போலீசார் மற்றும் வருவாய்த் துறையினர் ராமசாமி குடும்பத்தினரிடம் உரிய விசாரணை செய்து உள்ளனர்.




ஆனால் கடந்த 2006 முதல் 2018 ஆம் ஆண்டு ஜூலை மாதம் வரை 13 ஆண்டுகளில் ராமசாமி சொந்த ஊருக்கு வரவில்லை மற்றும் உறவினர்கள் யாருடனும் தொடர்பு கொள்ளவில்லை என பெற்றோர் மற்றும் உறவினர்கள் வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் தங்கள் மகன் உயிரோடு இருக்கிறாரா இல்லையா என தெரியாமல் கடந்த 14 ஆண்டுகளாக மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட கண்காணிப்பாளர், கோம்பை காவல் நிலையம் என ராமசாமியின் வயதான பெற்றோர்கள் தனது மகனை கண்டுபிடித்து தருமாறு கூறி அலைந்து வருகின்றனர். ராமசாமி குறித்த உரிய தகவல் அளிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரது பெற்றோர்கள் கண்ணீர் மல்க கோரிக்கை விடுக்கின்றனர்.


 


Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABP நாடு செய்திகளை உடனுக்குடன் பெற


https://bit.ly/2TMX27X


 


மேலும் தகவல்களுக்கு கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்,


''மணிகண்டனை அவதூறாக பேசி தற்கொலைக்கு தூண்டியதாக துப்புரவு மேற்பார்வையாளர் ஜோதிமுருகன் மீது இன்ஸ்பெக்டர் லாவண்யா வழக்குப்பதிவு செய்து அவரை கைது''