மதுரை பெரியார் பேருந்து நிலையம் பகுதியில் உள்ள நேதாஜி சாலையில் அமைந்திருந்த சுமார் 70, 80 ஆண்டுகள் பழமையான கட்டிடம் இன்று நள்ளிரவு திடீரென இடிந்து விழுந்தது, மேலும் நள்ளிரவு நேரத்தில் பெரும்பாலும் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் அதிஷ்டவசமாக உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. மேலும் இங்கிருந்த உணவகம் பழக்கடை பெட்டிக் கடைகள் உள்ளிட்ட நான்கிற்கும் மேற்பட்ட கடைகள் கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கி சேதமடைந்துள்ளது. தொடர்ந்து கடை உரிமையாளர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது தொடர்ந்து ஒவ்வொருவராக சம்பவத்தை வந்து வந்த வண்ணம் உள்ளனர்.
குறிப்பாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் மதுரை கீழ வெளி வீதி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவலர் சரவணன் மீது சுமார் 110 ஆண்டுகள் பழமை வாய்ந்த கட்டிடம் இடிந்து விழுந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது
மதுரையில் உள்ள பழமையான கட்டடங்கள் உள்ள நிலையில் தீயணைப்புத்துறை மற்றும் மாநகராட்சி நிர்வாகம் உரிய ஆய்வு மேற்கொண்டு கட்டட உறுதி தன்மை குறித்து விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இந்த நிலையில் இன்று நள்ளிரவில் திடீரென 70 ஆண்டுகளுக்கு மேல் கட்டப்பட்ட கட்டிடம் சரிந்து விழுந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து மதுரை ஆர்.டி.ஐ., ஆர்வலர் ஹக்கிம் நம்மிடம், ”மதுரையில் மீனாட்சியம்மன் கோயிலை சுற்றி 2கிலோ மீட்டர் சுற்றளவில் தான் அதிகளவு பழைய கட்டிடம் உள்ளது. எனவே நெல்பேட்டை, நேதாஜி தெரு, சிம்மக்கல் உள்ளிட்ட பகுதிகளில் மட்டும் ஆய்வு செய்தாளே அதிகளவு பழைய கட்டிடங்களை கண்டறிந்துவிடலாம். மாநகராட்சி தனிகுழு அமைத்து கட்டிடங்களை அகற்ற ஏற்பாடு செய்யலாம். வடமாநிலத்தை சேர்ந்த ஏராளமான வியாபாரிகள் அதிகளாவு பழைய கட்டிடங்களில் கடை நடத்தி வருகின்றனர். அவர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தி கட்டிடங்களை அகற்றலாம். இது போன்ற நடவடிக்கை எடுத்தால் விபத்துகளை தவிர்க்கலாம்” என்றார்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - 3 நாட்களில் 2 லட்சம் மரங்கள்.. காவேரி கூக்குரல் இயக்கம் மூலம் தமிழகம் முழுவதும் மரக்கன்று நட்ட விவசாயிகள்!
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - 3 நாட்களில் 2 லட்சம் மரங்கள்.. காவேரி கூக்குரல் இயக்கம் மூலம் தமிழகம் முழுவதும் மரக்கன்று நட்ட விவசாயிகள்!