கீழடியில் 10-ம் கட்ட அகழாய்வுப் பணியை தமிழக முதல்வர் நாளை தொடங்கி வைக்கிறார்

தேர்தலுக்கு முன்பாகவே 8- இடங்கள் தேர்வு செய்யப்பட்டு அதற்காக 5 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. ஆனால் நாடாளுமன்ற தேர்தல் வந்ததால் அங்கு பணிகள் துவங்காமல் இருந்தது, குறிப்பிடதக்கது.

Continues below advertisement

நாடாளுமன்ற தேர்தல் வந்ததால் அங்கு பணிகள் துவங்காமல் இருந்தது. இந்நிலையில் கீழயில் 10-ம் கட்ட அகழாய்வுப் பணியை தொல்லியல் அதிகாரிகள் துவக்க உள்ளனர்.

Continues below advertisement

கீழடியில் தொல்லியல் அகழாய்வு

கீழடியில் கடந்த  2014 -ம் ஆண்டு முதற்கட்ட அகழாய்வு பணி தொடங்கி 2 மற்றும் 3 கட்ட அகழாய்வு என மூன்று கட்டங்களை மத்திய தொல்லியல் துறையும், அதனைத் தொடர்ந்து நடைபெற்ற 4, 5, 6, 7, 8, 9 உள்ளிட்ட  அகழாய்வு பணிகளை தமிழ்நாடு தொல்லியல் துறையும் மேற்கொண்டனர். 2600 ஆண்டுகளுக்கு முற்பட்ட தொல்லியல் எச்சங்கள் கண்டறியப்பட்டன. கீழடி மற்றும் அதனை சுற்றியுள்ள கொந்தகை, அகரம், மணலூர் உள்ளிட்ட இடங்களில் தொல்லியல் ஆய்வில் கிடைத்த பழங்கால பொருட்கள் அருங்காட்சியகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

- அதிகளவு சொத்து வரி பாக்கி வைத்துள்ள டாப் 100 நபர்கள்! லிஸ்டில் நம்பர் 1 இந்த பிரபலமா? முழு விவரம்..

கீழடியில் அழகான அருங்காட்சியகம்

கீழடி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் கண்டறியப்பட்ட பொருட்களை பாதுகாக்கும் வகையிலும் காட்சிப்படுத்தும் வகையில் கீழடி அருகே உள்ள கொந்தகையில் அகழ்வைப்பகத்திற்கு 2 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டு 11 கோடி 3 லட்சம் மதிப்பிலான கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளது. இதில் பல்வேறு கட்ட அகழாய்வுப் பணியில் கண்டறியப்பட்ட பொருட்களை காட்சிப்பட்டுள்ளது. இந்த இடங்களில் தந்தத்தில் செய்யப்பட்ட பொருட்கள், சுடுமண் பொருட்கள், இரும்பு பொருட்கள், நெசவு பொருட்கள், அலங்கார பொருட்கள், தங்கத்தால் செய்யப்பட்ட பொருட்கள் என ஒவ்வொன்றும், ஒவ்வொரு பகுதியில் வைக்கப்பட்டுள்ளது.

டிஜிட்டல் முறையில் அறிந்து கொள்ளும் வசதியும் இங்கு உள்ளது. காரைக்குடி கட்டிட கலையில் இருக்கும் இந்த அருங்காட்சியகம் மிகவும் அழகாக காட்சியளிக்கிறது. இதனை தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் பார்வையிட்டு செல்கின்றனர்.

கீழடியில் 10-ம் கட்ட அகழாய்வுப் பணிகள்

இந்நிலையில் கீழடியில் 10-ம் கட்ட அகழாய்வுப் பணியை தமிழக முதல்வர் காணொலி காட்சி மூலம் துவங்கி வைக்கிறார். தேர்தலுக்கு முன்பாகவே 8- இடங்கள் தேர்வு செய்யப்பட்டு அதற்காக 5 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. ஆனால் நாடாளுமன்ற தேர்தல் வந்ததால் அங்கு பணிகள் துவங்காமல் இருந்தது. இந்நிலையில் கீழயில் 10-ம் கட்ட அகழாய்வுப் பணியை தொல்லியல் அதிகாரிகள் துவக்க உள்ளனர். இதனை தமிழ்நாடு முதல்வர் காணொலி காட்சி மூலமாக நாளை துவக்கி வைக்கிறார். கீழடியில் நேரடியாக நடைபெறும் நிகழ்வில் சிவகங்கை மாவட்ட ஆட்சியர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ., மற்றும் பொதுமக்கள் கலந்துகொள்வார்கள்.

மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Viral Video : மாலத்தீவில் கடலில் தத்தளித்த தம்பதி.. உயிரை காப்பாற்றிய ரியல் மாட்ரிட் அணியின் முன்னாள் வீரர்! வைரல் வீடியோ!

இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Kanchipuram Attack : “ஓட, ஓட பெண் காவலரை துரத்தி சென்று வெட்டிய கொடூரம்” காஞ்சியில் அதிர்ச்சி சம்பவம்..!

Continues below advertisement