டியுசன் எடுப்பதாக கூறி பள்ளி மாணவனுக்கு பாலியல் தொந்தரவு அளித்த புகாரில் போக்சோ வழக்கில் கோவில் அர்ச்சகர் கைது செய்யப்பட்டுள்ளார். மாணவனின் பெற்றோர் அளித்த புகாரின் கீழ் தல்லாகுளம் காவல்துறையினர் அர்ச்சகர் கண்ணனை, போக்சா வழக்கின் கீழ் கைது செய்தனர்.


பள்ளி மாணவன் குடும்பத்துடன் சாமி தரிசனம்


மதுரை தல்லாகுளம் பகுதியில் உள்ள பூங்கா முருகன் கோவில் உள்ளது. இந்த கோயிலில் முகூர்த்த நாட்களில் அதிகளவு திருமணம் நடைபெறும். இதனால் மதுரை நகர்பகுதி மக்கள் அதிகளவு வந்து செல்வார்கள்.  நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருவதும் குறிப்பிடத்தக்கது.


இந்நிலையில் கோவிலுக்கு கடந்த சில மாதங்களாக மதுரை மாநகர் பகுதியை சேர்ந்த 11-ம் வகுப்பு பள்ளி மாணவன் ஒருவர் தனது குடும்பத்துடன் அவ்வப்போது சாமி தரிசனம் செய்வதற்காக வந்துள்ளார். அப்போது கோவிலில்  கடந்த 4 ஆண்டுகளாக பணிபுரியும் அர்ச்சகரான கண்ணன் என்பவர் மாணவனுடன் பாசமாக பழகி உருக உருக பேசிக்கொண்டிருந்துள்ளார். அப்போது  தான் அக்கவுண்ட்ஸ் பாடத்தில் சிறப்பாக பயிற்சி பெற்றவர் என கூறி அறிமுகமாகி மாணவனிடம் அவ்வப்போது கோவிலுக்கு வரும்போது பேசி வந்துள்ளார்.


சிவகங்கை மாவட்டம் தொடர்பான செய்திகள் படிக்க - Sivagangai: மருதுபாண்டியர்கள் சிலைக்கு முழக்கங்கள் எழுப்பியபடி வீர வணக்கம் செலுத்திய விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் !



 


 


இரவில் வீட்டில் வைத்து டியுசன் நடத்திய அர்ச்சகர்


இதையடுத்து மாணவனுக்கு அர்ச்சகர் கண்ணன் செல்போன் எண்ணைக் கொடுத்து அறிமுகமான நிலையில் ஞாயிற்றுக்கிழமை அன்று கோவிலுக்கு சாமி தரிசனத்திற்கு வந்தபோது பள்ளி மாணவனிடம் இன்று இரவு தனது வீட்டில் வைத்து டியுசன் நடத்துவதாக கூறி அழைத்துள்ளார். இதனையடுத்து மாணவன் இரவு வீட்டிற்கு சென்றபோது தனியாக இருந்த கண்ணன் மாணவனிடம் பாலியல் ரீதியாக தொந்தரவு அளித்துள்ளார்.


இதனால் நள்ளிரவிலயே வீட்டிற்கு திரும்பிய மாணவன், 2 நாட்களாகவே அமைதியாக இருந்துள்ளார். இந்த நிலையில் பெற்றோர் இது குறித்து கேட்டபோது பள்ளி மாணவன், அர்ச்சகர் கண்ணன் தனக்கு பாலியல் தொந்தரவு அளித்ததைக் கூறியுள்ளார். 




 


மாணவனுக்கு பாலியல் தொல்லை தந்த அர்ச்சகர்


இதனையடுத்து மாணவனின் பெற்றோர் அளித்த புகாரின் கீழ் தல்லாகுளம் காவல்துறையினர், அர்ச்சகர் கண்ணனை போக்சா வழக்கின் கீழ் கைது செய்தனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட அர்ச்சகரான தூத்துக்குடியை சேர்ந்த கண்ணன், குடும்ப பிரச்சனையில் மனைவி மற்றும் பிள்ளைகளை பிரிந்து தனியாக அறை எடுத்து தங்கிவந்துள்ளார். இந்நிலையில் கோவிலுக்கு வந்த பள்ளி மாணவனுக்கு டியுசன் எடுப்பதாக கூறி கோவில் அர்ச்சகர் பாலியல் தொந்தரவு அளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


மேலும் அர்ச்சகர் கண்ணன் மூலம் வேறு எந்த மாணவனும் பாதிக்கப்பட்டுள்ளாரா என காவல்துறையினர் விசாரணை  நடத்தி வருகின்றனர்.


மேலும் செய்திகள் படிக்க - Ayudha Pooja 2023: தூய்மை பணியாளர்களுக்கு அசைவ உணவு..சாப்பிட்ட இலையை எடுத்த மண்டல குழு தலைவர் - காஞ்சியில் நெகிழ்ச்சி


இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - NIA Arrest : ‘ஹோட்டல் ஊழியர் போல பதுங்கியிருந்த பயங்கரவாதி?’ தேனியில் அதிரடி கைது..!