தமிழகத்தில் ஜனநாயகத் திருவிழாவான சட்டமன்றத் தேர்தல்-2026 களம் சூடுபிடித்துள்ளது. வருகின்ற 23-ஆம் தேதி மாநிலம் முழுவதும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், அதற்கான தேர்தல் நடைமுறைகளை இந்தியத் தேர்தல் ஆணையம் மிகத் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் பிரசாரம் செய்து வாக்கு சேகரித்து வருகின்றனர்.அதிமுக, திமுக, தவெக, நாம் தமிழர் கட்சி உட்பட பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்த முக்கிய தலைவர்கள் தங்களது கட்சியின் கொள்கைகள் மற்றும் செயல் திட்டங்கள் குறித்து மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்க பல்வேறு வகையில் பரப்புரை செய்து வருகின்றனர்.

Continues below advertisement

இந்த நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் உள்ள திமுக வேட்பாளர்களை ஆதரித்து தனது பிரச்சார பயணத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரசாரம் செய்து வருகிறார். ஏற்கனவே 4 கட்ட பிரசாரத்தை நிறைவு செய்துள்ள அவர் 5-ம் கட்ட பிரசாரத்தில் மும்முரமாக ஈடுபட்டு உள்ளார். இதன் தொடர்ச்சியாக 6-ம் கட்ட பிரசாரத்தை நாளை மறு நாள் (வெள்ளிக்கிழமை) ஆண்டிபட்டியில் தொடங்குகிறார். அன்று மாலை 5 மணிக்கு ஆண்டிபட்டியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் ஆண்டிபட்டி, பெரியகுளம், போடி, கம்பம் தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பேசுகிறார்.

Continues below advertisement

அன்று இரவு 7 மணிக்கு அவர் திண்டுக்கல்லில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் திண்டுக்கல், பழனி, ஆத்தூர், நிலக்கோட்டை, வேடசந்தூர், ஒட்டன்சத்திரம், நத்தம் தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பேசுகிறார். தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 18-ந்தேதி (சனிக்கிழமை) மாலை 5 மணிக்கு திருப்பூர் தெற்கு, வடக்கு, பல்லடம், அவினாசி, தாராபுரம், காங்கேயம், உடுமலைப்பேட்டை, மடத்துக்குளம் தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து திருப்பூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்திலும், இரவு 7 மணிக்கு மேட்டுப்பாளையம், ஊட்டி, கூடலூர், கவுண்டம்பாளையம், தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து மேட்டுப்பாளையத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்திலும் பேசுகிறார். வருகிற 19-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4 மணிக்கு ஓசூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் ஓசூர், கிருஷ்ணகிரி, ஊத்தங்கரை, பர்கூர், வேப்பனஹள்ளி, தனி தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகிறார்.