நடிகர் சூர்யா நிறைய முயற்சிகள் மற்றும் உழைப்பால் திரையுலகில் முன்னணி நடிகராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளார். சமீப காலமாக தொடர்ந்து ப்ளாக்பஸ்டர்களை கொடுத்து அனைத்து தரப்பிலிருந்தும் பாராட்டுகளை பெற்றுள்ளார். சூர்யா எப்போதுமே புது கதாபாத்திரங்களை பரிசோதித்து தனது உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதில் பெயர் பெற்றவர், இது அவருக்கு நிறைய ரசிகர்களைப் பெற உதவியிருக்கிறது. சமீபத்தில் அவர் பிளாக்பஸ்டர் ஹிட் படமான ”விக்ரம்”-இல் அவரது கேமியோ ரோலுக்கு பாஸிடிவ் விமர்சனங்கள் மற்றும் பாராட்டுகளைப் பெற்றார்.
ஓடிடி- இல் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற சூரரைப்போற்று, ஜெய் பீம் ஆகிய இரண்டு படங்களும் திரையரங்குகளில் வெளியிடப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சூர்யா நடித்த ‘சூரரைப்போற்று’ மற்றும் ‘ஜெய் பீம்’ ஆகிய படங்கள் சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு ஜூலை 22 முதல் ஜூலை 24 வரை பல்வேறு திரையரங்குகளில் திரையிடப்படவுள்ளது.
கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவின் முன்னணி நாயகனாக வலம் வரும் சூர்யா இன்று தனது 47-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இந்நிலையில் சூர்யா நடித்து வெளியான ஜெய்பீம் மாபெரும் வெற்றியை பெற்றது. சூர்யா நடிப்பில் வெளியான சூரரைப்போற்று திரைப்படத்திற்கும் தேசிய விருது கிடைத்துள்ளது. நடிகர் சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள் 30-க்கும் மேற்பட்டோர் இரத்ததானம் மற்றும் உடல்தானம் செய்தனர்.
-மதுரை - காசி ‘உலா ரயில்’ - மத்திய ரயில்வே அமைச்சர் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்
மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் நடிகர் சூர்யாவின் ரசிகர்கள் உடல்தானம் செய்தனர். தொடர்ந்து அரசு மருத்துவமனை பணியாளர்கள் உடல்தானம் செய்வதற்கான சான்றிதழ்களை வழங்கினர். நடிகர் சூர்யாவின் பிறந்தநாளையொட்டி ரசிகர்கள் உடல் மற்றும் ரத்த தானம் செய்தது பலரது பாராட்டை பெற்றுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்