திண்டுக்கல் மாவட்டம் கரூர் செல்லும் நெடுஞ்சாலையில் தனியார் பொறியியல் கல்லூரியில் செயல்பட்டு வருகிறது. இங்கு 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். கொரோனா ஊரடங்கிற்கு பிறகு கல்லூரிகள் செயல்பட உத்தரவு பிறப்பிக்கப்பட்டதையடுத்து கல்லூரிகள் திறக்கப்பட்டது. இந்த நிலையில் கல்லூரிக்கு சென்ற மாணவ, மாணவிகளை கல்வி கட்டணம் உடனடியாக செலுத்த கோரி கல்லூரி நிர்வாகம் வற்புறுத்தியதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து இன்று வழக்கமாக கல்லூரிக்கு சென்ற மாணவ, மாணவிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி நுழைவு வாயில் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து கல்லூரி மாணவ மாணவிகள் கூறும் போது கல்லூரியில் படிப்பதற்கு ஓர் ஆண்டுக்கு ஒரு லட்சம் வரை கல்விக் கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது. இதற்காக அரசு சார்பில் உதவித் தொகை ஸ்காலர்ஷிப் 80 ஆயிரம் ரூபாய் வரை கொடுக்கப்படுகிறது, மீதமுள்ள 20 ஆயிரம் ரூபாய் வரை மட்டும் மாணவர்கள் நேரடியாக கல்லூரிக்கு செலுத்துகிறோம். அரசு கொடுக்கும் உதவித் தொகை நேரடியாக கல்லூரி நிர்வாகத்திற்கு அனுப்பி வைக்கப்படுகிறது,
அந்த வகையில் இந்த வருடத்தில் கல்வி உதவித் தொகையாக 40 ஆயிரம் ரூபாய் மட்டுமே வருவதாகவும் எனவே மீதமுள்ள 40 ஆயிரம் பணத்தை மாணவ-மாணவிகள் தங்களது சொந்த பணத்தை உடனடியாக கட்ட வேண்டும் என கல்லூரி நிர்வாகம் கேட்கிறது, இன்று பணம் செலுத்தாவிட்டால் கல்லூரிக்கு வரவேண்டாம் என்றும் கூறி உள்ளனர். எனவே கல்லூரி நிர்வாகத்திற்கு நாங்கள் ஏற்கனவே 40 ஆயிரம் செலுத்திய நிலையில் அதற்கான உத்தரவாத ரசீதுகள் எதுவும் தரப்படவில்லை அரசின் உதவித்தொகை நேரடியாக கல்லூரிக்கு வரும் போது திருப்பி மாணவர்களாகிய எங்களிடம் தருவதாக கூறுகின்றனர்.
இப்படி குழப்பமான சூழ்நிலையில் படிப்பை தொடர முடியாத நிலை ஏற்படுகிறது எனவே கல்வி கட்டணம் குறித்த அறிக்கையை கல்லூரி நிர்வாகம் முறைப்படுத்தி முறையான தீர்வு எட்டப்பட வேண்டும் என்று கூறி கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து வகுப்புகளுக்கு செல்லாமல் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறினர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABP நாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X*
பூட்டுக்கு பெயர் போன திண்டுக்கல் மாவட்டத்திற்கு இன்று 36 ஆவது பிறந்தநாள்...!