ஜெயலலிதா செய்தது உண்மையில் நாடகம் என்று சொன்னால் அதை உண்மை என்று சொல்கின்ற நிர்மலா சீதாராமன் உட்பட அந்த செய்தியை வெளியிட்ட ஊடகம் மற்றும் பத்திரிகை நிருபர்கள் மீது வழக்கு பதிவு செய்வதற்கு ஸ்டாலினுக்கு தைரியம் இருக்கிறதா? -மதுரை விமான நிலையத்தில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் ஆவேசம்


அ.தி.மு.க., பொன்விழா மாநாட்டில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மற்றும் தம்பி துறை ஆகியோர் மதுரை விமான நிலையம் வந்தனர். தமிழகத்தில் சரித்திர திருப்புமுனையை ஏற்படுத்தக்கூடிய மாநாடு அமையும் என்று தெரிவித்துவிட்டு இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தனர் அப்போது அவர்கள் கூறுகையில்




ஓ.பி.எஸ்., மாவட்ட செயலாளர் கூட்டம் நாளை நடத்துவது குறித்த கேள்விக்கு:


நாங்கள் நடத்துவது மாநாடு அவர் நடத்துவது கிளைச் செயலாளர் கூட்டம். தேர்தல் ஆணையம் அங்கீகரித்துவிட்டது, தேசிய ஜனநாயக கூட்டணியும் எங்களுடன் தொடர்பில் இருக்கிறது. அதிமுக எடப்பாடி தலைமையில் தான் வருகிற நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்கிறது. 


திமுக போராட்டம் மற்றும் நீட் தேர்வுக்கான நடைமுறை குறித்த கேள்விக்கு:


திமுக கூட்டணி தான் நீட் தேர்வை கொண்டு வந்தது. 2012ல் திமுக கூட்டணி மத்தியில் ஆட்சியில் இருக்கும் போது நீட் தேர்வு நடத்தப்பட்டது. பின்னர் வழக்கு தொடரப்பட்டு தீர்ப்பு மாறியது. எமர்ஜென்சி பீரியடில் இந்திரா காந்தி கல்வி துறையை மாநில பட்டியலில் இருந்து பொது பட்டியலுக்கு மாற்றியது தான் இதற்கான முதல் பிரச்சனை. திமுக அரசியல் நாடகம் ஆடுகிறார்கள். உண்மையான தீர்வு காண வேண்டுமென்றால் மத்திய அரசை அணுகி சட்ட தீர்வு கொண்டு வர வேண்டும். நீட்டைப் பற்றி பேசுவதற்கோ, கட்சத் தீவை மீட்போம் என்று சொல்வதற்கு திமுகவுக்கும், ஸ்டாலினுக்கும் அருகதையே கிடையாது. உண்ணாவிரத போராட்டம் என்ற பெயரில் ஏற்கனவே தமிழர்களை கொன்று குவித்ததை இந்த நாடு பார்த்திருக்கிறது.




சட்டசபையில் ஜெயலலிதாவிற்கு நடைபெற்ற அவதூறு குறித்த கேள்விக்கு:


ஜெயலலிதா அவர்கள் ராஜினாமா செய்யவில்லை அந்த கடிதத்தை எடுத்தது யார் என்பதுதான் கேள்வி. அப்போது உள்துறை அமைச்சர் மற்றும் நிதி அமைச்சராக இருந்தது கருணாநிதி தான். உள்துறை அமைச்சராக இருக்கிறீர்கள் என்னுடைய கடிதத்தை நீங்கள் எப்படி திருடுனீர்கள் என்று ஜெயலலிதா கேட்டார்! அதற்காகத்தான் திமுகவினர் அந்த தாக்குதல் நடத்தினர். உரிமை பிரச்சனையை எழுப்பியதை ஏற்றுக் கொள்ள முடியாமல் திமுகவினர் நடத்திய நாடகம்தான் அது. இந்த நாடகம் ஜெயலலிதா அவர்கள் செய்யவில்லை திமுக நடத்திய நாடகம் தான் இது.  ஸ்டாலின் அரிச்சந்திரன் கிடையாது அவர் சொல்லும் வார்த்தைகள் தங்க எழுத்தில் எழுதப்படுவதற்கு. அவர்கள் குடும்பமே பொய் சொல்வதற்கு பெயர் போனவர்கள். வார்த்தையை மாற்றிப் பேச திருநாவுக்கரசர் கொடுத்த பேட்டி அன்று இருந்த ஊடகத்திலும் வந்துள்ளது, அப்போது இருந்த நிருபர்களும் பேட்டி அளித்திருக்கிறார்கள், அந்த சம்பவம் உண்மையில் நாடகம் என்று சொன்னால் அதை உண்மை என்று சொல்கின்ற நிர்மலா சீதாராமன் உட்பட அந்த செய்தியை வெளியிட்ட ஊடகம் மற்றும் பத்திரிகை நிருபர்கள் மீது வழக்கு பதிவு செய்வதற்கு ஸ்டாலினுக்கு தைரியம் இருக்கிறதா? என்று தெரிவித்தார்.


இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - கொடைக்கானல் செல்லும் வாகனங்களுக்கு புதிய கட்டுப்பாடு; மூடப்பட்ட சுற்றுலா இடங்கள் இன்று முதல் திறப்பு