முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் 6-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு மதுரை மாநகர் மாவட்டம் அ.தி.மு.க., சார்பாக வருகின்ற 5-ம் தேதி மாபெரும் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற உள்ளது. அது குறித்து ஆலோசனைக் கூட்டமானது மதுரை தெப்பக்குளம் பகுதியில் இருக்கக்கூடிய தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில்  முன்னாள் அமைச்சர் செல்லூர்  கே.ராஜூ தலைமையில் நடைபெற்றது.  இந்த ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் அவர்களுக்கு அஞ்சலி செலுத்த தொடர்பான 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேசுகையில்..,"அ.தி.மு.க., முடங்கி போய்விட்டது, அ.தி.மு.க., நான்காக உடைந்துவிட்டதாக பலர் கூறிவருகின்றனர். அ.தி.மு.க.,வை குறைத்து மதிப்பிட முடியாது, அண்ணன் தம்பியாக இருந்து வருகிறோம். நாங்கள் பனங்காட்டு நரிகள் எதற்கும் அஞ்சமாட்டோம், எங்களை நம்பி வந்தால் கரைசேர்போம்.  அ.தி.மு.கவை நம்பியவர்கள் கெட்டுப்போனது இல்லை. 



 

எந்த தலைவர்களையும் நம்பி அ.தி.மு.க., இல்லை. புரட்சி தலைவர் காலத்தில் இருந்து தலைவர்களின் வாழிகாட்டுதலில் இயக்கம் உள்ளது. எங்களை விட்டு பிரிந்து போனவர்கள் பற்றி எங்களுக்கு கவலை இல்லை. இரட்டை இலையும் அ.தி.மு.க கொடி எங்கு உள்ளதோ அங்கே  தான்  உண்மையான அ.தி.மு.க., தொண்டன் இருப்பான். நடிகை குஷ்பு விற்கு கோயில் கட்டிய தமிழ்நாட்டில் தி.மு.க., சைதை சித்திக் என்பவர் தரம் தாழ்ந்து பேசுகிறார்,யாரும் அவரை கண்டிக்கவில்லை. தி.மு.கவில் பெண்களை தரம் தாழ்த்தி பேசி வருகிறார்கள் பெண்களுக்கு சமத்துவமாக இடம் கொடுத்த ஒரு கட்சி என்றால் அது அதிமுகதான். பெண்களுக்காக பல திட்டங்கள் அ.தி.மு.க., அரசு பல திட்டம் கொண்டு வந்துள்ளது.



 

முதல்வர் எதிர்கட்சி தலைவராக இருக்கதான் லாயக்கு முதல்வராக இருக்க தகுதி இல்லை. அ.தி.மு.க., பத்தாண்டு ஆட்சி சரி இல்லை  என கூறுகிறார்கள். இந்த 2 ஆண்டில் பாலரும் தேனாறும் ஓடுகிறதா ? பொது விழாக்களில் அமைச்சர்களின் அவதூறு பேச்சை ஸ்டாலின் கண்டிக்க வில்லை. அமைச்சர்களை கேள்வி கேட்க முதல்வருக்கு வக்கு உள்ளதா? தி.மு.க ஆட்சிக்கு வந்தது முதல் வரி விதித்து வாட்டி வதைத்து வருகிறது. விலைவாசி குறைக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதிமுக ஆட்சியை பற்றிபேச முதல்வருக்கு தகுதி உள்ளதா? தமிழக மக்களுக்கு தடையற்ற மின்சாரம் கொடுத்தது அதிமுக. நிதி அமைச்சருக்கு வெட்கம் இல்லையா? அதிமுக கொண்டு வந்த திட்டங்களை குறைகூறிவிட்டு திட்டங்களை துவங்கி வைக்கிறார்கள். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ஊழல் இருக்கிறது என்ற இன்றுவரை நிரூப்பிக்கவில்லை. தி.மு.க., அரசு மதுரை மாநகராட்சிக்கு எந்த ஒரு நிதியும் ஒதுக்கவில்லை. தி.மு.க., - ஆட்சியில் நாள் முழுவதும் டாஸ்மாக் செயல்பட்டு வருகிறது.



 

அதிமுகவில் சீனியர் - ஜூனியர் பாகுபாடு இல்லை. திமுக அமைச்சர்களிடத்தில் ஒற்றுமை இல்லை. ஆட்சிக்கு வந்ததும் மது ஒழிப்பு என்று சொன்ன கனிமொழி - இப்போ எங்கே சென்றார். மின் எண்ணுடன் ஆதார் இணைப்பு தொடர்பாக ஏன் செய்ய வேண்டும் என்ற அறிக்கை இல்லை. அணில் அமைச்சர், ஆதார் அமைச்சர் ஆகிவிட்டார். 100 யூனிட் மின்சாரத்தை ரத்து செய்வதற்கு திமுக வழிவகை செய்கிறது. மதுவை ஒழிக்க வழியில்லாமல் தற்போது போதை மாநிலமாக மாறி உள்ளது. மடிக்கணினி, இருசக்கர வாகனம், தாலிக்கு தங்கம் திட்டத்தை நிறுத்திய கட்சி திமுக. பாரபட்சம் இல்லாமல் அனைவருக்குமான திட்டம் கொடுத்தது அதிமுக. மதுரை மக்களுக்கு திமுக கொண்டு வந்த திட்டம் எது தெரியாமா.? 100 கோடியில் கலைஞர் நூலகம். இங்க குடிக்கவே கஞ்சி இல்லையாம் அவர் அப்பாக்கு நூலகமாம். எழுதாத பேனாவிற்கு 80கோடி பணம் ஒதுக்கீடு செய்த கட்சி தான் திமுக

 

நிதி அமைச்சரின் தந்தைக்கு நாங்கள் மரியாதை கொடுப்போம் அப்பாற்பட்டவருக்கு பிறந்த மகனாடா என்கின்றனர்.   எதற்கு எடுத்தாலும் கமிஷன்? மீண்டும் ரவுடி ராஜியமாக மாரி வருகிறது மதுரை. தற்போது இருக்கும் நிதி அமைச்சர் கமிஷன் கேட்டு வருகிறார். மாநகராட்சி புதிய வீடு கட்டினால் 5 பேர் பைக்கிள் போய் மிரட்டுகிறார்கள்” என குற்றச்சாட்டுகளை அடுக்கினார்.