சிவகங்கையில் கூடைப்பந்து பயிற்றுநராக பயிற்சி வழங்க வாய்ப்பு - எப்படி விண்ணப்பம் செய்வது?
விளையாட்டு வீரர் வீராங்கணைகளுக்கான தேர்விற்கு கலந்து கொள்ளும் வாய்ப்பும் அளிக்கப்படவுள்ளது.
Continues below advertisement

கூடைப்பந்து - மாதிரிப்படம்
பயிற்றுநருக்கான விண்ணப்பத்தை சிவகங்கை மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் நேரில் பெற்றுக்கொள்ளலாம்.
உயரிய தரத்திலான விளையாட்டு திறன் மேம்பாடு
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், தமிழ்நாட்டை விளையாட்டில் முதன்மையான மாநிலமாக உருவாக்குவதுடன் தனிநபர்களுக்கு விளையாட்டுகளை முழுத்திறனுடன் அணுகவும். அவர்கள் உயர்மட்ட போட்டிகளில் பங்குபெற்று சிறப்படையவும் வாய்ப்புகளை வழங்குவதை நோக்கமாக கொண்டு செயல்படுகிறது. துணை முதலமைச்சர் அவர்கள் மானிய கோரிக்கையின் போது, தமிழ்நாட்டில் உள்ள மாவட்டங்களில் பிரபலமாக வீரர்கள், வீராங்கணைகள் பல்வேறு உயரிய நிலையிலான விளையாட்டுப் போட்டிகளில் மகத்தான வெற்றிகளைப் பதிவு செய்ய இயலும் என்பதனை கருத்தில் கொண்டு, தகுதியான பயிற்றுநர்களை மாவட்டந்தோறும் குறிப்பிட்ட விளையாட்டுக்களில் நியமனம் செய்து, வீரர்கள், வீராங்கணைகளுக்கு பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டு, அனைத்து மாவட்டங்களிலும் உயரிய தரத்திலான விளையாட்டு திறன் மேம்பாடு மற்றும் அங்கீகார மையம் STAR (SPORTS TALENT ADVANCEMENT & அறிவித்துள்ளார்கள். RECOGNITION) அகாடமி உருவாக்கப்படும் என்று.
தொடர் பயிற்சி வழங்கப்படவுள்ளது
அதன்படி, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் கூடைப்பந்து விளையாட்டிற்கான "SDAT ஸ்டார் அகாடமி மாவட்ட விளையாட்டு பயிற்சி மையம். அமைக்கப்படவுள்ளது. சிவகங்கை மாவட்ட விளையாட்டரங்கத்தில் இம்மையத்தில், 20 விளையாட்டு வீரர்கள். 20 வீராங்கணைகள் சேர்க்கப்பட்டு, அவர்களுக்கு ஒரு மாதத்தில் 25 நாட்கள் தொடர் பயிற்சி வழங்குவதோடு, சிற்றுண்டி, பயிற்சி உபகரணங்கள் மற்றும் விளையாட்டுச் சீருடைகளும் வழங்கப்படவுள்ளது.
கூடைப்பந்து பயிற்றுநர்
மேலும், இம்மையத்தில் கூடைப்பந்து பயிற்றுநராக பயிற்சி வழங்கிட கூடைப்பந்து விளையாட்டில், தேசிய விளையாட்டு நிறுவனம் (அ) இந்திய விளையாட்டு நிறுவனத்தால் வழங்கப்பட்ட முதுநிலை விளையாட்டு பயிற்சி சான்றிதழ் அல்லது ஒரு வருட டிப்ளமோ/சான்றிதழ் பயிற்சி (10 மாதங்களுக்கு குறைவாக இருத்தல் கூடாது) அல்லது தமிழ்நாடு உடற்கல்வி பல்கலைக்கழகத்தில் முதுநிலை டிப்ளமோ (விளையாட்டு) அல்லது சர்வதேச விளையாட்டு கூட்டமைப்பால் நடத்தப்பட்ட உரிமம் படிப்பு (License Course) அல்லது நேதாஜி சுபாஷ் விளையாட்டு நிறுவனத்தால் நடத்தப்பட்ட 6 வார சான்றிதழ் படிப்பு படித்தவராக இருத்தல் வேண்டும். மேலும், தேர்ந்தெடுக்கப்படும் பயிற்சியாளருக்கு மாதாந்திர சம்பளமாக ரூ.25,000/- வழங்கப்படும். (11 மாதங்கள் செயல்திறன் அடிப்படையில் புதுப்பிக்கப்படும்) பயிற்றுநர் வயது வரம்பு 50க்குள் இருத்தல் வேண்டும். மேலும், பயிற்றுநருக்கான விண்ணப்பத்தை சிவகங்கை மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் நேரில் பெற்றுக்கொள்ளலாம். வருகின்ற 20.04.2025 அன்று மாலை 5.00 மணிக்குள் விண்ணப்பித்திடல் வேண்டும். தகுதி வாய்ந்த பயிற்றுநர் விண்ணப்பதாரர்களுக்கு, நேர்முகத்தேர்வு சிவகங்கை மாவட்ட விளையாட்டரங்கில் நடைபெறும். உடற்தகுதி, விளையாட்டுத்திறன், பெற்ற பதக்கங்கள், பயிற்சி வழங்கும் திறன் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு நடைபெறும்.
விளையாட்டு வீரர்களுக்கும் வாய்ப்பு
விளையாட்டு வீரர் வீராங்கணைகளுக்கான தேர்விற்கு கலந்து கொள்ளும் விளையாட்டு வீரர் வீராங்கணைகள் 12 வயது முதல் 21 வயது வரை உள்ளவர்களாக இருத்தல் வேண்டும். விளையாட்டு விடுதி விதிமுறைகள் மூலமாக 20 மாணவர்கள் மற்றும் 20 மாணவிகள் என சிவகங்கை மாவட்ட மைத்திற்கு 40 விளையாட்டு வீரர், வீராங்கணைகள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். அவ்வாறாக, தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஒரு மாதத்தில் 25 நாட்கள் தொடர் பயிற்சி வழங்கிடுவதோடு, சிற்றுண்டி, பயிற்சி உபகரணங்கள் மற்றும் 2 விளையாட்டுச் சீருடை போன்றவைகள் வழங்கப்படும். மேலும், இத்தேர்வில் கலந்து கொள்ள விரும்பும் விளையாட்டு வீரர், வீராங்கணைகள் வருகின்ற 24.04.2025 அன்று சிவகங்கை விளையாட்டரங்கிற்கு நேரில் வருகை தர வேண்டும் என சிவகங்கை மாவட்ட மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.
Continues below advertisement
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.