உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா வெற்றி பெற தேங்காய் உடைத்து சிறப்பு வழிபாடு


உலகக் கோப்பை 2023ன் இறுதிப் போட்டியில் நாளை இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோத இருக்கின்றன. ஐந்து முறை சாம்பியனான ஆஸ்திரேலியா மற்றொரு உலகக் கோப்பை பட்டத்தை சேர்க்குமா அல்லது 12 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா கோப்பையை வெல்லுமா என்பது நாளை இரவு தெரிந்துவிடும். 






உலகக் கோப்பை இறுதிப்போட்டியானது இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான ஒருநாள் கிரிக்கெட்டின் 151வது போட்டியாகும். 1980-ம் ஆண்டு இரு அணிகளுக்கும் இடையே முதல் ஒருநாள் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணி மட்டுமே வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இருப்பினும், இதற்குப் பிறகும் கங்காருக்கள் ஆதிக்கம் செலுத்தினர். இதுவரை நடைபெற்ற ஆட்டங்களில் ஆஸ்திரேலிய அணி 83 ஆட்டங்களிலும், இந்திய அணி 57 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. 10 போட்டிகளும் முடிவு இல்லை. அதே போல் ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டிகளில் இந்தியா இதுவரை 13 முறை ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டுள்ளது. ஆஸ்திரேலியா 8 முறை வெற்றி பெற்றுள்ள நிலையில், இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 5 முறை மட்டுமே வென்றுள்ளது. ஆஸ்திரேலியா நிர்ணயித்த இலக்கை இரண்டு முறை சேஸ் செய்த இந்திய அணி 5 போட்டிகளில் முதலில் பேட்டிங் செய்து மூன்றில் வெற்றி பெற்றுள்ளது. 



 


மதுரை வடக்கு மாசி வீதி மேலமாசி வீதி சந்திப்பு-நேரு ஆலால சுந்தர விநாயகர் திருக்கோவில் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா வெற்றி பெற தேங்காய் உடைத்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது.




மதுரை வடக்கு மாசி வீதி மேலமாசி வீதி சந்திப்பில் உள்ள நேரு ஆலால சுந்தர விநாயகர் திருக்கோவிலில் நாளை நடைபெற உள்ள உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா வெற்றி பெற ஜல்லிக்கட்டு ரோட்டரி சங்கம் சார்பில் பொதுமக்களோடு ஒன்றிணைந்து தேங்காய் உடைத்து சிறப்பு வழிபாடு நடத்தி வருகின்றனர். இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் புகைப்படம் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு ஆல் தீ பெஸ்ட் இந்தியா என்று கோஷங்கள் முழங்கியவாறு தேங்காய்களை  உடைத்து  விநாயகரை வணங்கி வருகின்றனர்.