ராமேஸ்வரம் - செகந்தராபாத் ரயில் நிலையங்களுக்கு இடையே ஒரு வாராந்திர சிறப்பு ரயிலை இயக்க தென் மத்திய ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது. வண்டி எண் 07685 செகந்திராபாத் - ராமேஸ்வரம் வாராந்திர சிறப்பு ரயில் வரும் நாளை முதல் டிசம்பர் 28 வரை செவ்வாய் கிழமைகளில் செகந்திராபாத்தில் இருந்து இரவு 09.25 மணிக்கு புறப்பட்டு வியாழ கிழமைகளில் அதிகாலை 03.10 மணிக்கு ராமேஸ்வரம் வந்து சேரும். மறுமார்க்கத்தில் வண்டி எண் 07686 ராமேஸ்வரம் - செகந்திராபாத் வாராந்திர சிறப்பு ரயில் அக்டோபர் 21 முதல் டிசம்பர் 30 வரை வியாழக்கிழமைகளில் இரவு 11.55 மணிக்கு ராமேஸ்வரத்தில் இருந்து புறப்பட்டு சனிக்கிழமைகளில் காலை 07.10 மணிக்கு செகந்திராபாத் சென்று சேரும்.



 

இதை சற்று கவனிக்கவும் - *Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X*

 

விரைவில் இந்த ரயில்கள் நலகொண்டா, மிரியால்குடா, குண்டூர், தெனாலி, பாபட்லா, ஓங்கோல், நெல்லூர், கூடூர், ரேணிகுண்டா, திருப்பதி, சித்தூர், காட்பாடி, திருவண்ணாமலை, விழுப்புரம், திருப்பாதிரிப்புலியூர், சிதம்பரம், மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி, புதுக்கோட்டை, காரைக்குடி, மானாமதுரை ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.  இந்த ரயில்களில் இரண்டு குளிர்சாதன இரண்டடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், இரண்டு குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 10 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், 5 இரண்டாம் வகுப்பு இருக்கை வசதி பெட்டிகள், 2 சரக்கு மற்றும் காப்பாளர் பெட்டிகள் இணைக்கப்படும் எனவும் இந்த ரயில்களில் பயணம் செய்ய முன்பதிவு அவசியம் எனவும் தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

 




தீபாவளி பண்டிகையை கொண்டாட சொந்த ஊர்களுக்கு செல்வோருக்கு ஏதுவாக தமிழ்நாடு அரசுப்போக்குவரத்து கழகம் சார்பில் 16 ஆயிரத்து 540 பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்




“தீபாவளி பண்டிகையையொட்டி வருகிற 1,2,3 தேதி வரை தினசரி இயக்கக்கூடிய 2,100 பேருந்துகளுடன் 3,506 சிறப்பு பேருந்துகள் என 3 நாட்களுக்கும் சேர்த்து சென்னையில் இருந்து 9,806 பேருந்துகளும்,  பிற ஊர்களில் இருந்து மேற்கண்ட மூன்று நாட்களுக்கு 6,734 சிறப்பு பேருந்துகள் என மொத்தம் 16,540 பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. தீபாவளி பண்டிகை முடிந்த பின்னர் பிற ஊர்களில் இருந்து சென்னைக்கு வரும் பொதுமக்கள் வசதிக்காக நவம்பர் 5, 6, 7, 8 ஆகிய தேதிகலில் தினசரி இயங்கக்கூடிய 4,319 சிறப்பு பேருந்துகளும் ஏனைய முக்கிய ஊர்களிலிருந்து பல்வேறு ஊர்களுக்கு 5000 சிறப்பு பேருந்துகள் என மொத்தமாக 17,1719 பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.


சென்னையிலிருந்து தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊருக்கு செல்லும் பொது மக்களுக்கு வசதியாக மாதவரம் பேருந்து நிலையம் கே.கே நகர் பேருந்து நிலையம் தாம்பரம் அறிஞர் அண்ணா பேருந்து நிலையம் தாம்பரம் ரயில் நிலையம் பேருந்து நிலையம் பூந்தமல்லி பேருந்து நிலையம் டாக்டர் எம்ஜிஆர் பேருந்து நிலையம் கோயம்பேடு என ஐந்து இடங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்படும் முன்பதிவு செய்துள்ள பேருந்துகள் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்டு பூந்தமல்லி நசரத்பேட்டை வழியாக வெளிச்சுற்று சாலை வழியாக வண்டலூர் செல்லும். பொதுமக்கள் பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்வதற்கு வசதியாக கோயம்பேடு பேருந்து நிலையத்தில் 10 கவுண்டர்களும், தாம்பரம் சானிடோரியம் பேருந்து நிலையத்தில் 2 கவுண்டர்கள் என மொத்தம் 12 கவுண்டர்கள் வசதி செய்யப்பட்டுள்ளது. ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்பட்ட கட்டாயம் நடவடிக்கை எடுக்கப்படும் இதனை தடுக்க பொதுமக்கள் புகார் அளிக்க கூடிய வகையில் toll-free  1800 425 6151, 044 24749002 எண்களும் வெளியிடப்பட்டுள்ளதாக” தெரிவித்தார்.