ஆடி அமாவாசையை முன்னிட்டு மதுரை - காசி இடையே உலா ரயில் என்ற பெயரில் ஆன்மீக சுற்றுலா ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் மதுரையிலிருந்து கடந்த 23-ம் தேதி மதியம் புறப்பட்டது. இந்த ரயிலை டெல்லியில் இருந்து மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் காணொளி காட்சி மூலம் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்த ரயில் திண்டுக்கல், திருச்சி, விழுப்புரம், சென்னை எழும்பூர், விஜயவாடா வழியாக காசி சென்று அடையும். ஏழு சக்தி பீடங்கள் பாத கயா, நாபி கயா மற்றும் ஆடி அமாவாசை அன்று சிரோ கயாவில் முன்னோர்களுக்கு பித்ரு பூஜை, பூரி ஜெகன்நாதர் கோயில், கொனார்க் சூரியக் கோயில், கல்கத்தா உள்ளூர் சுற்றுலா, காசி விசுவநாதர், அன்னபூரணி தரிசனம், பின்பு விஜயவாடா கனகதுர்கா தரிசனத்தோடு சுற்றுலா நிறைவடைகிறது. சுற்றுலா செல்லும் மொத்த தூரம் 5548 கிலோமீட்டர் ஆகும். இந்நிலையில் அதே போல் ஆடி அமாவாசைக்கு மதுரையிலிருந்து ராமேஸ்வரத்திற்கு சிறப்பு ரயில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்