பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பலரும் சொந்த ஊரில் கொண்டாட விரும்புவார்கள்.  பண்டிகையை கொண்டாட சொந்த ஊர்களுக்கு பல்வேறு பகுதிகளுக்கு பயணம் செய்ய வாய்ப்புள்ளது. பயணிகளின் தேவையினை பூர்த்தி செய்யும் வகையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மதுரை மூலம் வழக்கமான வழித்தட பேருந்துகளும் மற்றும் சிறப்பு பேருந்துகளும் இயக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.



இதுகுறித்து மதுரை மண்டல மேலாண் இயக்குநர் தெரிவித்துள்ள தகவலில், 'பொங்கல் பண்டிகை மற்றும் தொடர் விடுமுறை வருவதால் 12.01.2023 முதல் 14.01.2023 வரை சென்னையில் இருந்து 280 பேருந்துகளும் மற்றும் பல்வேறு இடங்களுக்கு 610 பேருந்துகள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி திருச்சி-135, திருப்பூர்-80, கோவை-120, திருநெல்வேலி-35. நாகர்கோவில்-35, திருச்செந்தூர் -30. மற்றவை-175 பேருந்துகள் இயக்கப்படுகிறது. மேலும் விடுமுறை முடிந்து ஊர் திரும்ப ஏதுவாக 16.01.2023 முதல் 18.01.2023 வரை சென்னைக்கு 275 பேருந்துகளும் மற்றும் பல்வேறு இடங்களுக்கு 625 பேருந்துகளும் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. திருச்சி-138.திருப்பூர-77, கோவை-121, திருநெல்வேலி-35, நாகர்கோவில்-35, திருச்செந்துரர்-30, மற்றவை-189 பேருந்திகள் என பயணிகளின் தேவைக்கேற்ப சிறப்பு பேருந்துகள் இயக்கம் செய்ய விரிவான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.



 

பொது மக்களின் நலனை கருத்தில் கொண்டும், பயணிகள் பாதுகாப்பான பயணம் மேற்கொள்வதற்கும் ஏதுவாக பயணிகளுக்கு வழிகாட்டவும் சிறப்பு பேருந்துகளை கண்காணிக்கவும், முக்கிய பேருந்து நிலையங்களில் அலுவலர்கள், பொறியாளர்கள், கண்காணிப்பாளர்கள், பணியாளர்கள் மற்றும் பயணசீட்டு ஆய்வாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்" என தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் மதுரை மண்டல மேலாண் இயக்குநர் தகவல் தெரிவித்துள்ளார்.

 







ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண