விழுப்புரம் - ராமேஸ்வரம் ரயிலுக்கு கூடுதல் நிறுத்தங்கள் 
 
விழுப்புரம் - ராமேஸ்வரம் - விழுப்புரம்  இடையே ஜூன் 21, 22, 28, 29 ஆகிய சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு ரயில் (06109/06110) இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த ரயில்களுக்கு தற்போது கூடுதல் நிறுத்தங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி இந்த ரயில்கள் பெண்ணாடம், அரியலூர், பரமக்குடி ஆகிய ரயில் நிலையங்களிலும் நின்று செல்லும்.
 
சிலம்பு ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு 
 
அதே போல் பயணிகளின் வசதிக்காக தாம்பரம் - செங்கோட்டை - தாம்பரம் சிலம்பு (20681/20682) மற்றும் தாம்பரம் - நாகர்கோவில் - தாம்பரம் வாராந்திர சேவை (22657/22658) ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட இருக்கிறது. அதன்படி இந்த ரயில்களில் ஒரு குளிர்சாதன இரண்டுக்கு படுக்கை வசதி பெட்டி, 2 குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 3 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள் மற்றும் ஒரு இரண்டாம் வகுப்பு பொதுப்பெட்டி ஆகியவை இணைக்கப்படும். இந்த புதிய வசதி சிலம்பு ரயிலில் தாம்பரத்தில் இருந்து ஜூன் 20 முதல் ஆகஸ்ட் 27 வரையும் செங்கோட்டையில் இருந்து ஜூன் 21 முதல் ஆகஸ்ட் 28 வரையும் செயல்பாட்டில் இருக்கும். அதேபோல நாகர்கோவில் ரயிலில் தாம்பரத்தில் இருந்து ஜூன் 18 முதல் ஆகஸ்ட் 27 வரையும் நாகர்கோவிலில் இருந்து ஜூன் 19 முதல் ஆகஸ்ட் 28 வரையும் செயல்பாட்டில் இருக்கும். இதன் மூலம் இந்த ரயில்கள் தற்காலிகமாக ஒரு குளிர்சாதன முதல் வகுப்பு மற்றும் இரண்டு அடுக்கு படுக்கை வசதி பெட்டி, 2 குளிர்சாதன இரண்டடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 4 குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 11 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், 4 இரண்டாம் வகுப்பு பொது பெட்டிகள், 2 சரக்கு பெட்டியுடன் கூடிய ரயில் மேலாளர் பெட்டிகள் ஆகியவற்றுடன் இயக்கப்படும்.