1. ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையிலான போலீசார் நேற்று மாலை ரோந்து சென்றனர். கிழக்கு கடற்கரை சாலையில் சோலியக்குடி விலக்கில் நீண்ட நேரமாக ஒரு கார் நின்றது. அந்தக்காரை போலீசார் சோதனை செய்த போது நான்கு பைகளில் 40 கிலோ எடையுள்ள கடல் அட்டை இருந்தது. ரூ. 2 லட்சம் மதிப்புள்ள கடல் அட்டையை பறிமுதல் செய்த போலீசார்,காரை கைப்பற்றி, விசாரிக்கின்றனர்.

 

2. ராமேஸ்வரம் அருகே பாம்பன் கடற்கரையில் மீனவர் மர்மமான முறையில் உயிரிழந்து ஒதுங்கி கிடந்தார். பாலத்தில் மீன்பிடிக்க சென்ற மீனவர் இருளாண்டி உயிரிழந்தது மர்மம் உள்ளதாக உறவினர்கள் தெரிவித்தனர். பாம்பன் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

 

3. நெல்லை மாநகர போலீசில் போக்குவரத்து பாதுகாவலர் பணிக்கு விண்ணப்பிக்க அறிவுருத்தல் செய்யப்பட்டது. மாநகர ஆயுதப்படை அலுவலகம், போக்குவரத்து பிரிவில் விண்ணப்பத்தை பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

4. உரத்தட்டுப்பாட்டை போக்கும் வகையில் 1330 டன் காம்ப்ளக்ஸ் உரம் ஆந்திராவில் இருந்து நெல்லைக்கு ரயில் மூலம் வந்துள்ளது.

 

5. நெல்லை மாவட்டம் தாழையூத்து பகுதி மானூர் வட்டாரத்தில் இன்று மின் தடை.

 மானூர், தாழையூத்து, சேதுராயன்புதூர், ராஜவல்லிபுரம், ரஸ்தா, தச்சநல்லூர், தென்கலம்புதூர், நாஞ்சான் குளம், தென்கலம், மதவக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் இன்று மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

 

6. "மழை வெள்ள பாதிப்பு காரணமாக தமிழ்நாடு அரசு  விவசாயிகளுக்கு 1-ஹெக்டருக்கு 20-ஆயிரம் ரூபாய்  நிவாரண நிதி கொடுப்பதாக கூறி உள்ளார். ஆனால் இதை முதல்வர் தான் எதிர்கட்சி தலைவராக இருந்தபோது நிவர் புயல் ஏற்பட்டபோது 1-ஏக்கருக்கு  30-ஆயிரம் வழங்க வேண்டும் என்றார்". - தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தூத்துக்குடி விமான நிலையத்தில் பேட்டி-

 

 

7. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் விசாரணைக்கு சென்ற போலீசாரை கத்தியால் குத்தி தப்பியவரை போலீசார் பிடித்து விசாரணை செய்து வருகின்றனர்.

.

8.தமிழ்நாடு கிராம வங்கியின் மோசமான நிர்வாகமும், ஊழியர் பழிவாங்கும் கொள்கையும். உடனடி தலையீடு கோரி சு.வெங்கடேசன் மதுரை எம்.பி. கடிதம் எழுதியுள்ளார்.

 

 

9. மதுரை அழகர்கோயிலில், கள்ளழகருக்கு தைலக்காப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் வரிசையில் நின்று தீர்த்த நீர் ஆடினர்.

 

10. கார்த்திகை மாதப்பிறப்பை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டது. 4.30 மணிக்கு விசுவரூப தீபாராதனை நடந்தது. தொடர்ந்து உதயமார்த்தாண்ட அபிஷேகமும், தீபாராதனையும் நடந்தது. அதனைத்தொடர்ந்து மற்ற காலபூஜைகள் நடந்தது. கோவிலில் கலச நீராட்டு விழா நடைபெற்றதால் காலை 6 மணி முதல் 7.30 மணி வரை சுவாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதிக்கப்படவில்லை. ஐயப்ப பக்தர்கள் காலை 4-30 மணி முதல் 6 மணிக்குள் தரிசனம் செய்து மாலை அணிந்து கொண்டனர்.