தேனியில் உள்ள தனியார் திருமண மஹாலில் உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையின் சார்பில், நடைபெற்ற சிறுதானிய உணவுத் திருவிழாவில் சிறந்த சிறுதானிய உணவு தயாரிப்பாளர்களுக்கும், சிறப்பான முறையில் சிறுதானியங்களின் நன்மைகள் குறித்து பொதுமக்களுக்கு எடுத்துரைத்த அலுவலர்களுக்கும் பரிசுத்தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர்  வி.ஷஜீவனா வழங்கினார்.


Karungali Malai: எல்லோரும் கருங்காலிமாலையை அணியக்கூடாது! இவர்களுக்கு மட்டும்தான்! - ஜோதிடர் சொல்வது என்ன?




தமிழர்களின் பாரம்பரிய உணவு முறைகளை மீட்டெடுப்பதற்காகவும், சிறுதானிய உணவுகளை எடுத்துக்கொள்வதால் ஏற்படும் நன்மைகள் குறித்து அறிந்து கொள்வதற்கும், பாரம்பரிய உணவுகளை வரும் தலைமுறையினருக்கு எடுத்துரைப்பதற்காகவும் நமது உணவுப்பழக்கத்தினை மாற்றுவதன் அவசியத்தை வலியுறுத்தும் விதமாக இந்த சிறுதானிய உணவுத்திருவிழா நடைபெற்றது.


Parliament Winter Session: பதாகைகளை ஏந்தி முற்றுகையிட்ட எம்.பி.,க்கள் - நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு




சிறுதானிய உணவுத்திருவிழாவில் பொதுமக்களுக்கு, சிறுதானிய உணவுகள் உட்கொள்வதால் ஏற்படும் நன்மைகள் குறித்தும், அதனை எவ்வாறு எளிய முறையில் தயார் செய்வது குறித்து எளிய முறையில் விளக்கிய அலுவலர்களுக்கும்,  சுவையான மற்றும் சத்தான நாம் அறியப்படாத சிறுதானிய உணவினை தயார் செய்த தயாரிப்பாளர்களுக்கும் மாவட்ட ஆட்சித்தலைவர்  ரொக்கப்பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.


MS Dhoni: சச்சினுக்கு அடுத்து தோனிக்கு கிடைத்த மிகப்பெரிய கெளரவம்: பிசிசிஐயின் அதிரடி முடிவு




அதனைத் தொடர்ந்து, வேளாண்மைத்துறையின் சார்பில் சிறுதானிய பயிர்கள் சாகுபடியினை அதிகரிப்பதற்கும், விவசாயிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கும் 10 விவசாயிகளுக்கு சிறுதானிய விதைகளை மாவட்ட ஆட்சியர்  வழங்கினார். மேலும், ஊட்டச்சத்துமிக்க சிறுதானியங்கள் சாகுபடி தொழில்நுட்பம் மற்றும் உணவு தயாரிக்கும் வழிமுறை குறித்த கையேட்டினை வெளியிட்டார்கள். இந்நிகழ்வில், தேனி-அல்லிநகரம் நகர்மன்ற தலைவர்  ரேணுபிரியா பாலமுருகன், மாவட்ட வழங்கல் அலுவலர் திருமதி சாந்தி, திட்ட இயக்குநர் , ரூபன் சங்கர் ராஜ், இணை இயக்குநர் (வேளாண்மை) பன்னீர் செல்வம்,  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.