சிவகங்கை மாவட்டத்தில் திருப்புவனம் பகுதிகளில் நாளை ( அக்டோபர் 09, 2025, வியாழக்கிழமை) மின் பாதையில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் தடை செய்யப்பட உள்ளது.

Continues below advertisement

 மாதாந்திர பராமரிப்புப் பணிகள்

தமிழ்நாட்டில் மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக மின்சாரம் நிறுத்தப்படும்போது, அது குறித்து முந்தைய நாள் அறிவிக்கப்படும். இந்த பராமரிப்புப் பணிகளின்போது, சிறிய பழுதுகளைச் சரிசெய்வது, மின்கம்பங்கள் மற்றும் மின்வழித்தடங்களில் உள்ள மரக்கிளைகளை அகற்றுவது போன்ற பல்வேறு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவார்கள். இந்நிலையில் சிவகங்கை மாவட்டத்தில் பல இடங்களில் நாளை காலை 09 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
 
மின்தடை செய்யப்படும் பகுதிகள்
 
* திருப்புவனம், *  திருப்புவனம்புதூர், *  செல்லப்பனேந்தல், *  லாடனேந்தல், * டி.பாப்பான்குளம்,
 
* தூதை, *  திருப்பாச்சேத்தி, *  ஆவரங்காடு, * வெள்ளிக்குறிச்சி, * மாரநாடு, * கொத்தங்குளம்,
 
* கீழச்சொரிக்குளம், * பிரமனூர், * மேலச்சொரிக்குளம், * முதுவந் திடல், * பழையனூர்,
 
* ஓடாத்தூர், * எஸ்.வாகைக்குளம், * அச்சங்குளம், * வயல்சேரி, * சொக்கநாதிருப்பு, * கீழராங்கியம்,
 
* மேலராங்கியம், * தவத்தாரேந்தல், * அல்லிநகரம், * அ.வெள்ளக்கரை, * நயினார்பேட்டை,
 
* கலியாந்தூர், * கீழவெள்ளூர், * மேலவெள்ளூர், * மாங்குடி, * அம்பலத்தாடி, * முக்குடி,
 
* செங்குளம், * காஞ்சிரங்குளம், * பொட்டப்பாளையம், * கரிசல்குளம், * புலியூர்,
 
* சாய்னாபுரம், * பாட்டம், * கொந்தகை, * கீழடி, * சொட்டதட்டி, * ஒத்த வீடு, * மணலூர்,
 
* அதிகரை, * கழு கேர்கடை, * தட்டான்குளம், * வடகரை, * மடப்புரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதி களில் மின்வினியோகம் இருக்காது. இந்த தகவலை மானாமதுரை மின்வாரிய செயற்பொறியாளர் (பொறுப்பு) சொர்ணப்பா தெரிவித்துள்ளார்.
 
மின்தடை நேரத்தில் செய்ய வேண்டியவை

மின்தடை காலங்களில் தகவல்களைப் பெறுவது மிகவும் முக்கியம். மின்சாரம் மீண்டும் வழங்கப்படும் நிலை மற்றும் அவசர அறிவிப்புகள் குறித்து தெரிந்துகொள்ள, குடியிருப்போர் பேட்டரி சக்தியில் இயங்கும் வானொலிகள் அல்லது முழுமையாக சார்ஜ் செய்யப்பட்ட மொபைல் போன்களை பயன்படுத்த வேண்டும். மொபைல் பேட்டரி ஆயுளை பாதுகாக்க, பவர் சேவிங் மோடினை இயக்கி, அவசர அழைப்புகள் மற்றும் குறுந்தகவல்கள் போன்ற தேவையான பயன்பாட்டிற்கு மட்டுமே போனைக் கொண்டு செயல்படுவது நல்லது.

Continues below advertisement

 பாதுகாப்பாகவும் சுகமாகவும் சமாளிக்க முடியும்.

மின்தடை நேரத்தில் திடீர் மின்வெட்டு ஏற்படும் அபாயத்தைத் தவிர்க்க, லிப்டைப் பயன்படுத்தாமல் இருக்க வேண்டும். மேலும், அவசர தொடர்பு எண்கள் எளிதில் கிடைக்கும் வகையில் வைத்திருப்பதோடு, தண்ணீர், சிற்றுண்டி, மற்றும் முதலுதவி பெட்டி போன்ற அத்தியாவசிய பொருட்களையும் தயாராக வைத்திருக்க வேண்டும்.இந்த முன்னெச்சரிக்கைகளைப் பின்பற்றுவதன் மூலம், குடியிருப்போர் மின்தடை நேரத்தை பாதுகாப்பாகவும் சுகமாகவும் சமாளிக்க முடியும்.