சிவகங்கை மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் ராஜசேகரன் என்பவர் பல ஆண்டுகளாக மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் உதவியாளராக (டபேதார்) தொடர்ந்து பணி செய்து வந்தார். இந்நிலையில் அவரது பணி ஓய்வு பெற்று நேற்று தனது பணியை நிறைவு செய்தார்.
இந்நிலையில் அவர் பணி ஓய்வு நாளில் அவரது வீடு வரை மாவட்ட ஆட்சியர் சென்று வழி அனுப்பி வைத்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் ஆட்சியர் வழி அனுப்பி வைக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதுகுறித்து ஓய்வு பெற்ற டபேதார் ராஜசேகரனிடம் பேசினோம், “சிவகங்கை மாவட்டத்தில் காஞ்சிரங்கால் பகுதியில் என்னுடைய பணியை துவங்கினேன். 1994-ல் கட்டிடமையத்தில் தற்காலிக பணியாளராக பணிக்கு சேர்ந்தேன். பி.டி.ஓ., தலைமையின் கீழ் கட்டிட மையம் செயல்பட்டது. அதில் நான் பல வருடமாக வேலை செய்தேன். தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கு மேல் பணி செய்த நபர்களுக்கு அரசு நிரந்தர பணி வழங்கப்பட்டது. அப்போது சிவகங்கை கலெக்டர் பங்களாவில் சில ஆண்டுகள் வேலை செய்தேன். ஆட்சியர் லதா, மலர் விழி உள்ளிட்டவர்கள் பணி செய்த போது பங்களாவில் பணி செய்தேன். அதற்கு பின் ஆட்சியர் அலுவலகத்தில் டபேதாராக பணி செய்ய ஆரம்பித்தேன். அதற்கு பின் 7 வருடங்களாக டபேதாரராக பணி செய்து தற்போது ஓய்வு பெற்றுள்ளேன். மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித், அவர்கள் என்னை வீடு வரை வந்து வழி அனுப்பி வைத்தார். இது எனக்கு மிகப்பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உறவினர்கள், பக்கத்து வீட்டுக் காரர்கள் அனைவரும் பெருமையாக பார்த்தனர்” என்று நெகிழ்ந்தார்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்