மாற்றுத்திறனாளிகளிடையே விளையாட்டுப் போட்டிகள் மட்டுமன்றி, அவர்களின் தனித்திறன்களை வெளிக்கொணரும் வகையிலும் பல்வேறு வகையான போட்டிகள் நடத்தப்பட்டு  வருகிறது. 


 

உலக மாற்றுத்திறனாளிகள் தினம்

 

சிவகங்கை மாவட்டம், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு, மாவட்ட  ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்றையதினம்  மாவட்ட அளவில் மாற்றுத்திறனாளிகளுக்கான மாபெரும் ஓவிய போட்டியினை மாவட்ட ஆட்சித்தலைவர் தொடங்கி வைத்து தெரிவிக்கையில்...,” தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மாற்றுத்திறனாளிகளின் நலனில் மிகுந்த அக்கறை கொண்டு, எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி அவர்களின் வாழ்வாதாரத்ததை மேம்படுத்தி வருவது மட்டுமன்றி, அவர்களின் தனித்திறன்களை வெளிக்கொணரும் வண்ணமும் சிறப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். அந்தவகையில், ஆண்டுதோறும் மாற்றுத்திறனாளிகள் தின விழாவானது,                     டிசம்பர் 3-ஆம் தேதியன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அவ்விழாவினை முன்னிட்டு, அவர்களை ஊக்குவிக்கும் வண்ணம் மாற்றுத்திறனாளிகளிடையே விளையாட்டுப் போட்டிகள் மட்டுமன்றி, அவர்களின் தனித்திறன்களை வெளிக்கொணரும் வகையிலும் பல்வேறு வகையான போட்டிகள் நடத்தப்பட்டு  வருகிறது. 

 

உதவிகளை முழுமையாக பயன்படுத்திக் கொண்டு பயன்பெற வேண்டும்

 

அதன் ஒரு பகுதியாக இன்றையதினம் அனைத்து வகையான மாற்றுத்திறனாளிகள் பங்கேற்ற ஓவிய போட்டிகள் நடைபெற்றது. இப்போட்டியில்  174 சிறப்பு பள்ளி மாணாக்கர்கள் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்றுள்ளனர். மாணாக்கர்கள் சிந்தனையில் உதித்த ஒவ்வொரு ஒவியமும் கலைநயத்துடன் திகழ்கிறது. இதுபோன்று, தங்களுக்கான தனித்திறன்களை வெளிக்கொணர்வதற்கு முதலில் இதுபோன்று, பல்வேறு வகையான போட்டிகளில் பங்கேற்றல் வேண்டும்.  அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தின விழாவை முன்னிட்டு, இன்றையதினம் சிறப்பாக நடைபெற்று வரும் ஓவிய போட்டியில் பங்கேற்றுள்ள அனைத்து மாணாக்கர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். தங்களுக்கான அனைத்து உதவிகளையும் செய்திட மாவட்ட நிர்வாகம் தயராராக உள்ளது. எனவே, அதனை முழுமையாக பயன்படுத்திக் கொண்டு பயன்பெற வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் கா.பொற்கொடி, தெரிவித்தார்.