என்ன மனுசன்யா.. என்று சொல்ல வைக்கும் அளவிற்கு பைக் திருடனின் செயல் ஒன்று வைரலாகியுள்ளது
திருப்புவனம் அருகே திருடிய பைக்கை, ரூ.1500 பணம் மற்றும் மன்னிப்புக் கடிதத்துடன் உரிமையாளர் வீட்டின் முன்பு நிறுத்திச் சென்ற திருடன்.
Continues below advertisement

திருடன் எழுதிய கடிதம்
பிளாக் பாண்டா என்ற பெயரிலான கடிதத்தில், "அவசரத்துக்கு எடுத்துட்டேன். தவறை உணர்ந்து 450 கி.மீ தூரம் பயணித்து கொண்டுவந்துள்ளேன். ரூ.1500 பணம் பெட்ரோல் டேங்க்கில் இருக்கு. எப்படியும் கெட்ட வார்த்தை பேசியிருப்பீர்கள். அதற்கு நீங்கள் வருந்த வேண்டும். இல்லையென்றால் நாங்கள் வருந்த வைப்போம்” என எழுதப்பட்டுள்ளது.
பைக் திருட்டு
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அடுத்த டி.பழையூர் கிராமத்தில் வசித்து வருபவர் வீரமணி. இவருடைய, பைக் நான்கு நாட்களுக்கு முன்பு இரவில் வீட்டின் முன் நிறுத்திவிட்டு மறுநாள் காலை பார்க்கும் பொழுது மர்ம நபர்கள் அதை திருடி சென்றுள்ளதை அறிந்த வீரமணி திருப்புவனம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து வழக்கு பதிவு செய்த திருப்புவனம் காவல்துறையினர் இருசக்கர வாகனத்தை திருடி சென்ற மர்ம நபர்கள் குறித்து விசாரித்து வந்தனர். இந்நிலையில் நேற்று முந்தினம் இரவு வீட்டின் அருகே கடிதம் எழுதி வைத்துவிட்டு, திருடிய பைக்கை நிறுத்திச் சென்ற சம்பவம் காவலர்கள் மத்தியில் சிரிப்பலையை அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டு இருந்த வார்த்தைகள் அனுப்புனர் "பிளாக் பாண்டா பயலுக" எப்புன்னு அப்புன்னு வெள்ள கோடு பயலுக என்றும்.
பைக் திருடன் செய்த செயல்
நான் வெளியூரில் இருந்து வந்து கொண்டிருந்தேன் அப்பொழுது நான்கு வழிச்சாலையில் ஒரு சின்ன சிக்கல் ஆகிப்போச்சு அவசரதுக்கு உங்க தெரு பக்கம் வரும் பொழுது உங்க வண்டி என் கண்ணில் சிக்குச்சு ஆபத்துக்கு பாவம் இல்னு வண்டியை எடுத்துட்டேன். தற்பொழுது இதை நினைத்து மிகவும் வருந்துகிறேன். என் தவறை சரி செய்ய நானே 450 கிலோ மீட்டர் தாண்டி வந்து உங்கள் வீட்டிலயே நிறுத்து விட்டேன். நீங்கள் எப்படியும் என்னை கெட்ட வார்த்தையில் பேசிரிப்பிங்க அத நினச்சு வருந்துங்கள். இல்லை என்றால் நாங்கள் வருந்த வைப்போம்” என்றும் இப்படிக்கு பிளாக் பாண்டா பயலுக. எனவும், அவருடைய கையெழுத்தையும் போட்டு கடிதம் முடிவில்
பின்குறிப்பு அவசரத்திற்கு r15 உதவி உங்கள் வண்டி கொடுத்தத்திற்கு நன்றி, வணக்கம். என்றும் வண்டி பெட்ரோல் டேங்கில் ரூ 1500 வைத்துள்ளேன். எடுத்து கொள்ளுங்கள் என்றும். கடிதம் எழுதி வைத்து வண்டியை நிறுத்தி சென்ற சம்பவம் பொதுமக்கள் மத்தியில் சிரிப்பை ஏற்படுத்தி வந்தாலும், தற்பொழுது திருப்புவனம் காவல்துறையினர் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட திருடனை தேடி வருகின்றனர்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - முதல் பரிசு ரூ.10 லட்சம், 2ஆம் பரிசு ரூ.5 லட்சம்.. தமிழக அரசின் "மஞ்சப்பை" விருது - விண்ணப்பிப்பது எப்படி? முழு விபரம் இதோ
மேலும் செய்தி படிக்க இங்கே கிளிக் செய்யவும் - “என்னை தெர்மாகோல் என ஓட்டுகிறார்கள்” பொறுத்தது போதும் பொங்கி எழு - செல்லூர் ராஜூ
Continues below advertisement
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.