நீர்வள ஆதாரத்துறை மற்றும்  ஊரக வளர்ச்சி துறை கட்டுபாட்டிலுள்ள நீர்நிலைகளில் விவசாய பெருமக்கள், மண்பாண்ட தொழிலாளர்கள் மற்றும் தனிநபர்களின் வீட்டு உபயோகத்திற்கு இலவசமாக வண்டல் மண், களி மண் எடுத்குச் செல்ல tnesevai.tn.gov.in என்ற இணையதள வாயிலாக  விதிமுறைகளுக்குட்பட்டு விண்ணப்பிக்கலாம்.

 
வண்டல் மண், களிமண் இலவசமாக எடுத்துச் செல்வது தொடர்பான அனுமதி
 
"சிவகங்கை மாவட்டத்தில் நீர்வள ஆதாரத்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை கட்டுபாட்டிலுள்ள நீர்நிலைகளில் இருந்து தமிழ்நாடு சிறுகனிம விதிகள் 1959 விதி எண்.12-2(a) மற்றும் 12-2(b)-ன்படி விவசாய பெருமக்கள், மண்பாண்ட தொழிலாளர்கள் மற்றும் தனி நபர்களின் வீட்டு உபயோகத்திற்கு கீழ்காணும் அளவிற்கான வண்டல் மண், களிமண் இலவசமாக எடுத்துச் செல்வது தொடர்பான அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. அதில்,
 
விவசாய பயன்பாடு
 
1.நஞ்சை நிலம் : இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு ஏக்கருக்கு 75 கன மீட்டர்/ 25 டிராக்டர் லோடுகள்
 
2.புஞ்சை நிலம் : இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு ஏக்கருக்கு 90 கன மீட்டர்/30 டிராக்டர் லோடுகள்.
 
மண்பாண்ட தொழில் பயன்பாடு
 
3. மண்பாண்டம் தயாரித்தல் : 60 கன மீட்டர் அல்லது 20 டிராக்டர் லோடுகள்
 
தனி நபர்
 
4. வீட்டு உபயோகத்திற்கு : கன மீட்டர் அல்லது 10 டிராக்டர் லோடுகள்
 
சிவகங்கை மாவட்டத்தின் நீர்வளஆதாரத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 1100 நீர்நிலைகள்  மற்றும் ஊரக வளர்ச்சித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 386  நீர்நிலைகளின்  ஆக மொத்தம் 1486 நீர்நிலைகளும், 25.06.2026 சிவகங்கை  மாவட்ட அரசிதழ்களில் சிறப்பு வெளியீடு செய்யப்பட்டுள்ளது.
 
இலவசமாக வண்டல் மண், களிமண்ணை பெற்றுக்கொள்ள
 
மேலும், இலவசமாக வண்டல் மண், களிமண்ணை பெற்றுக்கொள்ள tnesevai.tn.gov.in என்ற இணையதள முகவரி வாயிலாக விதிமுறைகளுக்குட்பட்டு, உரிய ஆவணங்களுடன் விண்ணப்பம் செய்து சம்பந்தப்பட்ட வருவாய் வட்டாட்சியரிடம் அனுமதி பெற்று, சம்பந்தப்பட்ட நீர்நிலைகளின் கட்டுபாட்டு அலுவலரிடம் (Tank incharge) சமர்பித்து, அனுமதி அளிக்கப்பட்ட அளவிற்கான மண்ணை உரிய நடைச்சீட்டு பெற்று, கட்டுபாட்டு அலுவலரின் (Tank incharge)   முன்னிலையில் எடுத்துக் கொள்ளலாம்.
 
மண்ணை உரிய நடைச்சீட்டு பெற்று எடுத்து செல்ல வேண்டும்
 
மேலும், வட்டாட்சியரிடமிருந்து பெறப்படும் அனுமதியினை ஏரியின் கட்டுப்பாட்டு அலுவலர் (Tank incharge) இடம் சமர்ப்பித்து அவர் முன்னிலையில் அனுமதி அளிக்கப்பட்ட அளவிற்கான மண்ணை உரிய நடைச்சீட்டு பெற்று எடுத்து செல்ல வேண்டும். ஏரியின் கட்டுபாட்டு அலுவலரிடமிருந்து உரிய  நடைச்சீட்டு பெறாமல்                  வண்டல் மண், களிமண் எடுத்து செல்லுதல், அளவிற்கு அதிகமாக எடுத்துச் செல்லுதல் ஆகியன கண்டறியப்பட்டால், விதிமீறலில் ஈடுபடும் வாகனங்களை கைப்பற்றுவதோடு, சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். குறிப்பாக, இவ்வனுமதியின் கீழ் பெறப்படும் வண்டல், களிமண் போன்றவற்றை எவ்வித வணிக நோக்கத்திற்காக பயன்படுத்தக்கூடாது என மாவட்ட ஆட்சித்தலைவர்    ப.ஆகாஷ், தெரிவித்துள்ளார்.