உசிலம்பட்டி அருகே பிரபல தனியார் தங்கும் விடுதியில் மின்கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டு கூட்ட அரங்கம் முழுவதும் எரிந்து சேதமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Continues below advertisement

பிரபல தனியார் சொகுசு தங்கும் விடுதி.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே ஆண்டிபட்டி கணவாய் அடிவார பகுதியான செட்டியபட்டியில் அமைந்துள்ளது பிரபல தனியார் சொகுசு தங்கும் விடுதி. இந்த விடுதியில் உள்ள கூட்ட அரங்கில் மின்கசிவு காரணமாக திடீர் தீவிபத்து ஏற்பட்டு தீ மளமளவென பரவு கூட்ட அரங்கம் முழுவதும் எரிந்து சேதமடைந்தது. தகவலறிந்து விரைந்து வந்த உசிலம்பட்டி தீயணைப்புத்துறை நிலைய அலுவலர் ஜீவா தலைமையிலான தீயணைப்புத்துறை வீரர்கள் சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

Continues below advertisement

தீயினால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காணப்பட்டு பரபரப்பை ஏற்படுத்தியது.,

இந்த தீவிபத்தில் நல்வாய்ப்பாக மனிதர்கள் யாருக்கும் எந்த சோதமும் ஏற்படாத சூழலில் இச் சம்பவம் தொடர்பாக உசிலம்பட்டி தாலுகா காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தனியார் தங்கும் விடுதியில் காலை நேரத்தில் ஏற்பட்ட தீயினால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காணப்பட்டு பரபரப்பை  ஏற்படுத்தியது.