இந்திய தேர்தல் ஆணையம் (ECI) வாக்காளர் பட்டியலின் நம்பகத்தன்மையையும் துல்லியத்தையும் உறுதி செய்வதற்காக, சிறப்பு தீவிர திருத்தப் (SIR) பணியைத் தொடங்கியுள்ளது. தமிழ்நாட்டில் இந்த பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இந்த நிலையில், SIRக்கு ஆதரவாகவும், எதிராகவும் பல்வேறு கருத்துக்களும் விமர்சனங்களும் எழுந்து வருகிறது. அதே நேரத்தில் SIR பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
திண்டுக்கல் காட்டு ஆஸ்பத்திரி சாலையில் அமைந்துள்ள வ.உ.சிதம்பரம் சிலைக்கு திண்டுக்கல் அதிமுக எம்எல்ஏ மற்றும் முன்னாள் அமைச்சர் சீனிவாசன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின் அதிமுக திண்டுக்கல் சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்து பேசும் போது, பீகார் இடைத்தேர்தல் முழுக்க, முழுக்க தமிழகத்தில் வெற்றியாக வரும். 220 இடங்களுக்கு மேல் அதிமுக வெற்றி பெற்று, எடப்பாடி பழனிச்சாமி 2026ல், பீகார் நிதீஷ் குமார் போன்று முதலமைச்சராக வருவார். SIR எதிர்க்க ஒன்றுமில்லை 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும். காங்கிரஸ் ஆட்சியில் நடைபெற்றது. எதற்காக ராகுல் அவர்கள் SIR எதிர்க்கிறார் என்று தெரியவில்லை. ஸ்டாலினும் இதை இழுத்து வருகிறார்.
வாக்காளர் சேர்க்கும் இடத்தில் திமுக கொடி தான் பறக்கிறது. அவர்கள்தான் அனைத்து இடங்களிலும் இருக்கிறார்கள். SIR -யை வீடு வீடாக சேர்க்க வேண்டும். நமது சுதந்திரம் நமது உரிமை. இதனால் எந்த பாதிப்பும் இல்லை. ஏன் திமுக மற்றும் ஸ்டாலின் இதை தடுக்கிறார்கள் தெரியவில்லை. புலி வால் பிடித்து விட முடியாமல் தவிக்கிறார்கள். உண்மை தமிழ்நாட்டு மக்களுக்கு தெரியும். 234 தொகுதிக்கும் என ஆயிரக்கணக்கான வாக்கு சாவடிகள் உள்ளது. அதற்கான ஆட்களை நியமனம் செய்து சம்பளம் கொடுத்தால்தான் வேலை செய்வார்கள். இருக்கும் ஊதியத்தை வைத்து அரசு ஊழியர்களை வேலை வாங்கினால் எவ்வாறு செய்வார்கள். அரசு ஊழியர்கள் செய்வது நூற்றுக்கு நூறு சரி.
SIR - யால் ஒரு கோடி வாக்குகள் குறையும் என்ன சீமான் கூறுவது குறித்த கேள்விக்கு, சீமான் சொல்வது குறைவான வாக்குகள் அதிகமான வாக்குகள் குறையும். திண்டுக்கல் தொகுதியில் 40 ஆயிரம் முதல் 50,000 வாக்குகள் பாதிக்கும். பீகார் வெற்றிக்கு காரணம் எஸ் ஐ ஆர் தான். SIR எதிர்ப்பு போராட்டம் குறித்து விஜய் இடம் தான் கேட்க வேண்டும். திமுகவை வசை பாடுவதற்காகவே SIR எதிர்ப்பு போராட்டத்தை விஜய் நடத்தியுள்ளார் என திருமாவளவன் கருத்து தெரிவித்தது குறித்து அவரிடம் தான் கேட்க வேண்டும் என கூறினார்.