மருத்துவர் சுரேஷ் பாபு மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு நேரில் வந்ததும், காரில் ஒரு மணி நேரமாக அங்கும் இங்கும் சென்றபடி உயர் அதிகாரிகளுடன் ஹர்திக் செல்போனில் லஞ்சப்பணம் குறித்து டீல் பேசியதாக FIRல் தகவல்.

 

உங்களுக்கு சம்மன் அனுப்பி, அந்த தகவல் பத்திரிகை செய்தியாக வெளிவந்துவிடும் பரவாயில்லையா என மிரட்டியதாகவும் FIRல்தகவல் 

 

மதுரை துணை மண்டல அமலாக்கத்துறை அதிகாரி கைது செய்யப்பட்ட விவகாரத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை 13 மணி நேரம் சோதனை நடத்திய நிலையில் சில அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்ப லஞ்ச ஒழிப்புத்துறையினர் திட்டம் என தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் மதுரை அமலாக்கத்துறை அதிகாரி கைது செய்யப்பட்டதில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சார்பில் வெளியான முதல் தகவல் அறிக்கையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

 


 

அதில்..,”அக்டோபர் 30 ஆம் தேதி மதுரை தபால் தந்தி நகரில் உள்ள ED அலுவலகத்திற்கு சென்றதாகவும், அங்கு பார்வையாளர் பதிவேட்டில்   பெயர், செல்போன் எண் மற்றும் திண்டுக்கல் என பதிவு செய்ததாகவும் FIRல் தகவல் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒரு மணி நேரம் காரில் சுற்றியபடியே பிரதமர் அலுவலகத்தில் இருந்து உங்கள் மீது வழக்குப்பதிவு செய்ய சொன்னதாக ஹர்திக் கூறியதாகவும் FIR ல் கூறப்பட்டுள்ளது.

 

சட்டத்திற்கு புறம்பாக இரவு நேரங்களில் அறுவை சிகிச்சைக்கு செல்வதாகவும் அப்போது மருத்துவர் சட்டபடி தான் செய்கிறேன் என கூறிய நிலையில் அப்போது Hardik என்ற அவருடைய மேல் அதிகாரிக்கு நான் கூறிய தகவலை அலைபேசியில் ஹிந்தி மற்றும் ஆங்கிலத்திலும் தெரிவித்ததாகவும் Firல் தகவல்.

 

அதன் பின்பு அந்த நபர் தனது உயர் அதிகாரியிடம் கூறிவிட்டதாகவும், ரூபாய் 51 லட்சம் மட்டும் கொடுத்தால் போதும் எனவும், அதனை புதன்கிழமை (01.11.2023) அன்று தயாராக வைத்திருக்குமாறும், அவர் சொல்லும் இடத்தில் வந்து கொடுக்கவேண்டும் என்று கூறினார் என FIRல் தகவல்.


 

நவம்பர் 1 ஆம் தேதி முதல் தவணையாக ரூபாய்.20 லட்சம் கொண்டு வந்திருப்பதாக மருத்துவர் அமலாக்கத்துறை அதிகாரியிடம் தெரிவித்தபோது  அவர் தனது மேல் அதிகாரிகள் ஒத்துக்கொள்ள மாட்டார்கள் எனவும், என் மீதான புகாரினை அவர் முடித்து மேல் அதிகாரிகளுக்கு கடந்த 31.10.2023ம் தேதியே அனுப்பிவிட்டதாகவும், அங்குதான் நிலுவையில் உள்ளது எனவும் தெரிவித்தாகவும் FIRல் தகவல்.

 

கடந்த நவம்பர் 1 ஆம் தேதி அமலாக்கத்துறை அதிகாரி ஹர்திக் மருத்துவரிடம் இருந்து 20 லட்சம் பணம் பெற்றபோது டாக்டர் காரின் முன்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கேமராவில் பதிவாகியுள்ளது. பணம் தன்னிடம் கொடுத்தது தொடர்பாக யாரிடமாவது தெரிவித்தால், உங்கள் மீதும், உங்கள் மனைவி மீதும் ED கடுமையான நடவடிக்கை எடுக்கும் எனவும் ஹர்திக் மிரட்டியதாக தகவல்.

 

மீண்டும் 01.11.2023ம் தேதி காலை 8.54 மணிக்கு என்னை Whatsapp Callல் தொடர்பு கொண்டு முழு பணத்தினையும் வாங்காமல், ஏன் இந்த பணத்தினை வாங்கினீர்கள் என்று அவருடைய மேல் அதிகாரிகள் அவரை திட்டியதாகவும், மீதிப் பணம் ரூபாய் 31 லட்சத்தினை கண்டிப்பாக அடுத்த புதன்கிழமை 08.11.2023ம் தேதி கொடுக்க வேண்டும் எனக் கூறியதாகவும் FIR ல் தகவல்

 

ஹர்திக் மருத்துவர் சுரேஷ்பாபுவை மீண்டும் 03.11.2023 மற்றும் 06.11.2023  08.11.2023ம் ஆகிய தேதிகளில் Whatsapp Callல் தொடர்பு கொண்டு பணத்தினை கண்டிப்பாக கொடுக்க வேண்டும் என கூறியதாகவும் FIRல் தகவல்

 

பணம் 20 லட்சம் தயாராக இருப்பதாக கூறிய நிலையில் அவர் வேறு முக்கிய பணியாக சென்னைக்கும், டெல்லிக்கும் சென்று வந்ததாகவும், அதனை என்னிடமே பத்திரமாக வைத்திருக்குமாறு கூறினார், சீக்கிரமாக வந்து பெற்றுக்கொள்வதாகவும் கூறியதாக FIRல் தகவல்.



காவிரி ஆற்றில் மணல் குவாரி தொடர்பான பணியில் இருப்பதாக ஹர்திக் கூறியாதாகவும் அந்த பணத்தினை மருத்துவர் நீண்டநாள் கையில் வைத்திருக்க முடியாது என கூறியதற்கு,  உங்களுக்கு ஹவாலா பணம் பரிமாற்றம் செய்பவர்கள் யாரும் தெரியாதா எனக் அமலாக்கத்துறை அதிகாரி ஹர்திக் கேட்டதாக FIRல் தகவல். 

 

லஞ்சம் பெறுவது தொடர்பாக  நீங்கள் யாரிடமும் தெரிவிக்ககூடாது எனவும், அப்படி ஏதாவது செய்தால் உங்கள் மீது எதிர்மறையான விளைவுகள் ஏற்படும் என்றும் ஹர்திக் கூறியதாக FIRல் தகவல்.

 

மருத்துவரிடம் அமலாக்கத்துறை அதிகாரி ஹர்திக் பேசியபோது உங்களுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு சில இடங்களில் நடந்த ரெய்டு பற்றி தெரியும், அதனால் கவனமாக இருங்கள் என எச்சரித்ததாகவும் FIRல் தகவல்.

 

கடந்த 29.11.2023ம் தேதி காலை 8.31 மணிக்கு Hardik  whatscallல் தொடர்பு கொண்டு திண்டுக்கல் பகுதியில்  ஒரு வேலை இருப்பதாகவும், அந்த வழியே வரும்போது பணத்தை பெற்றுக்கொள்வதாகவும், தயாராக வைத்திருங்கள் எனக் கூறியதாகவும் FIRல் தகவல்

 

இந்த விசயத்தை உங்களுக்குள்ளேயே வைத்திருங்கள், இதனோட முக்கியத்துவம் உங்களுக்கு தெரியும், கவனமாக இருங்கள், உங்கள் நல்லதுக்குத்தான் கூறுகிறேன் என்று அமலாக்கத்துறை அதிகாரி மருத்துவரிடம் கூறியதாக FIRல் தகவல்



 

தன்னை மிரட்டி, நிர்ப்பந்தம் செய்து பணம் ரூபாய் 20 லட்சத்தினை ஏற்கனவே 01.11.2023ம் தேதி பெற்றுக் கொண்டும், மேலும் ரூபாய் 31 லட்சத்தினை தரவில்லை என்றால் என்மீதும், என் மனைவி மீதும் வழக்கு பதிவு செய்து எனது மருத்துவ சேவையினை களங்கப்படுத்தி விடுவதாக தெரிவித்து மன உளைச்சலுக்கு ஆளாக்கியதாகவும் மருத்துவர் புகார் என FIRல் தகவல்.

 

இதனை தொடர்ந்து லஞ்சம் கேட்ட EDயில் பணிபுரிந்து வரும் ஹர்த்திக் என்பவர் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு மருத்துவர் புகார் அளித்ததாகவும் FIRல்தகவல்