தேனியில் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்ட நிலையில் அவருடன் இருந்த வாகன ஓட்டுனர் மற்றும் அவருடைய நண்பர் இருவரும் கைது செய்யப்பட்டு தேனி பழனிசெட்டிபட்டி காவல் துறையினர் விசாரணை.


சவுக்கு சங்கர் கைது


யூ டியூபரான சவுக்கு சங்கர், சவுக்கு மீடியா என்ற யூ டியூப் சேனலை நடத்தி வருகிறார். மேலும் பல்வேறு யூ டியூப் சேனல்களில் அரசியல் தொடர்பான கருத்துகளை அவர் தெரிவித்து வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் யூ டியூப் சேனல் ஒன்றிக்கு சவுக்கு சங்கர் நேர்காணல் அளித்திருந்தார். அதில் காவல் துறை அதிகாரிகள் குறித்தும், பெண் காவலர்கள் குறித்தும் அவதூறான கருத்தை சவுக்கு சங்கர் தெரிவித்தாக கூறப்படுகிறது.




நீதிமன்ற காவலில் சிறையில் அடைப்பு


இதுகுறித்து கோவை மாநகர சைபர் கிரைம் காவல் துறையினர் சவுக்கு சங்கர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் தேனி மாவட்டத்தில் சவுக்கு சங்கர் தங்கியிருப்பது மாநகர சைபர் கிரைம் காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து தேனி சென்ற சைபர் கிரைம் காவல் துறையினர், அங்கு தங்கி இருந்த சவுக்கு சங்கரை,  நேற்று அதிகாலையில் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அவரை அங்கிருந்து கோவை சைபர் கிரைம் காவல் துறை அலுவலகத்திற்கு தேனியில் இருந்து காவல் துறையினர் அழைத்து வந்தனர். கோவை சைபர் கிரைம் காவல் நிலையத்தில் வைத்து அவரிடம் விசாரணை மேற்கொள்ள சைபர் கிரைம் காவல் துறையினர் திட்டமிட்டு விசாரணைக்கு பின்னர் சவுக்கு சங்கரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.   சவுக்கு சங்கரை வருகின்ற 17 ம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி கோபாலகிருஷ்ணன் உத்தரவிட்டார்.




சவுக்கு சங்கர் உடனிருந்தவர்கள் கைது


இந்த நிலையில் தேனியில் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்ட நிலையில் அவருடன் இருந்த வாகன ஓட்டுனர் மற்றும் அவருடைய நண்பர் இருவரும் கைது செய்யப்பட்டு தேனி பழனிசெட்டிபட்டி காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையில் தனியார் விடுதியில் சவுக்கு சங்கரை கைது செய்யும்போது காவல்துறையினரை தகாத வார்த்தையில் பேசுதல், கொலை மிரட்டல்,  விடுத்தும் வாகனத்தில் தடை செய்யப்பட்ட கஞ்சா பொட்டலம் கைப்பற்றி  அவர்கள் இருவரையும் தேனி பழனிசெட்டிபட்டி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.




வாகனம் பறிமுதல் மற்றும் பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு


அவர்கள் பயன்படுத்திய வாகனத்தையும் பறிமுதல் செய்து காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்றனர். அவர்களிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில்   அவர்கள் பயன்படுத்துவதற்காக 400 கிராம் கஞ்சாவினை வாகனத்தில் வைத்திருந்ததாகவும் விசேஷ நிகழ்ச்சி ஒன்றிற்கு பங்கேற்பதற்காக வந்துவிட்டு மறுநாள் மூணாறுக்கு செல்ல இருந்ததாகவும்   கூறியதாகவும் முதல் கட்ட விசாரணையில் காவல்துறையினர் தெரிவித்தனர். அவர்கள் மீது காவல்துறையினர் பணி செய்ய விடாமல் அவர்களை தகாத வார்த்தையில் பேசி கொலை மிரட்டல் விட்டதாகவும் 294(b),353,506(I),8(c)8(w),20(b)(2)(a),29(I),25 ndps act என  பல்வேறு வழக்குகளில் பதிவு செய்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.