சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு  சிறையில் உள்ள சார்பு ஆய்வாளர் ரகு கணேஷ் தனக்கு ஜாமின் வழங்க கோரி  உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், "சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் நான் உட்பட 9 பேர் மதுரை சிறையில் உள்ளோம். இந்த வழக்கில் உள்ள  105 சாட்சிகளில் 22 பேரை மட்டுமே  இது வரை விசாரித்து உள்ளனர். 20 மாதங்களுக்கும் மேலாக நீதிமன்ற  காவலில் சிறையில் வைக்க பட்டுள்ளோம். விசாரணை முடியும் வரை காவலில் வைத்திருப்பது சட்டவிரோதமானது. எனக்கு ஜாமீன் வழங்கும் பட்சத்தில் நீதிமன்றம் விதிக்கும் கட்டுப்பாடுகளுக்கு கட்டுப்படுவேன். எனவே, எனுக்கு ஜாமின் வழங்கு உத்தரவிட வேண்டும்." என மனுவில் கூறியிருந்தார்.


இந்த மனு நீதிபதி முரளிசங்கர் முன்பு விசாரணைக்கு வந்தது.சிபிஐ சார்பில், காவல் துறைக்கு வழங்கப்பட்டுள்ள சக்தி மக்களைக் காப்பாற்றவே, நாடு முழுவதும் நிம்மதியாக இரவு பொதுமக்கள் தூங்குவதற்கு காரணம் காவல்துறையினர். ஆனால் இந்த வழக்கை பொறுத்தவரை 2 நபர்கள் காவல் நிலையத்தில் வைத்து கொடூரமாக தாக்கப்பட்டுள்ளனர். மேலும் மனுதாரர் ரகு கணேஷ் இதுபோன்ற குற்றங்களில் ஏற்கனவே ஈடுபட்டுள்ளார். கொரோனா காலகட்டம் இருந்ததால் விசாரணையில் தாமதம் ஏற்பட்டது. முக்கிய குற்றவாளியாக கருதப்படும் இவருக்கு ஜாமீன் வழங்கும் பட்சத்தில் சாட்சியங்கள் அளிக்கப்பட வாய்ப்புள்ளது. என தெரிவிக்கப்பட்டது. இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி, வழக்கின் உத்தரவிற்காக தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தார்.










நெல்லை மாவட்டம்  பழவூர், ஆவாரைகுளம் பஞ்சாயத்தில் சேர்க்கப்பட்ட  சிதம்பராபுரம் கிராம பகுதிகளுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரகோரிய வழக்கு

 

நெல்லை மாவட்டம் சிதம்பராபுரத்தை சேர்ந்த ஜெனிட்டா மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள சிதம்பராபுரம் கிராம ஊராட்சியில் வார்டு மறுவரையறை செய்த போது,   சிதம்பராபுரத்தில் உள்ள  84 வீடுகளை பிரித்து பழவூர், ஆவாரைகுளம் பஞ்சாயத்தில் சேர்த்தனர்.பழவூர் , ஆவாரைகுளம் பஞ்சாயத்தில் சேர்க்கப்பட்ட  சிதம்பராபுரம் கிராமத்தில் உள்ள பகுதிகளுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரவும், , சொத்து வரி வாங்கவும், அதற்கான ரசீதுகளை வழங்கவும் மறுக்கின்றனர். எனவே, வார்டு மறுவரையின் போது  பழவூர், ஆவாரைகுளம் பஞ்சாயத்துகளில்  சேர்க்கப்பட்ட  சிதம்பராபுரம் கிராமத்தில் உள்ள பகுதிகளுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரவும், சொத்து வரியை வசூலித்து ரசீதுகளை வழங்கவும் உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.

 

இந்த மனு நீதிபதிகள் பரேஷ் உபத்யாய்,   விஜயகுமார் அமர்வு, முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, பழவூர் மற்றும் ஆவாரைக்குளம் பஞ்சாயத்து தலைவர்களும், மாவட்ட திட்ட அலுவரும் ஆஜராகினர். அவர்களிடம் நீதிபதிகள், "கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது ,உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினீர்கள். ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? நடவடிக்கை எடுக்காத பஞ்சாயத்து தலைவர்களை பதவி நீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கலாமா? என கேள்வி எழுப்பினர். தொடர்ந்து, வார்டு  மறு வரையறையின் போது,  சிதம்பராபுரம் பஞ்சாயத்தில் இருந்து பிரித்து  பழவூர்,  ஆவாரைகுளம் பஞ்சாயத்துகளில் சேர்த்த குடியிருப்புகளுக்கு  உரிய அடிப்படை வசதிகள் செய்து தருவதாகவும், முறையாக சொத்து வரிகளை வசூலிப்பதாகவும் பஞ்சாயத்து தலைவர்கள் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. இதை தொடர்ந்து, நீதிபதிகள் வழக்கை ஏப்ரல் 13 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.