வதந்தி 2 வெப் சீரியஸில் முடக்காத்தான் மணி மட்டுமல்ல எந்த மணி என பெயர் வைத்துள்ள அனைவரும் ஏற்றுக்கொள்ளும் படமாக இருக்கும். ஜல்லிக்கட்டு மாடுபடி வீரர்களை தப்பாக சித்தரிக்க நான் விட மாட்டேன் - மாடுபிடி வீரர் முடக்காத்தான் மணியை நேரில் சந்தித்து விளக்கமளித்த நடிகர் சசிக்குமார். சசிக்குமார் நடிக்கும் வதந்தி 2 வெப் சீரியஸ் நடிகர் சசிக்குமார் நடிக்கும் வதந்தி 2 வெப் சீரியஸில் முடக்காத்தான் மணி என்ற கதாபாத்திரம் தவறாக காட்டப்பட்டுள்ளதாக கூறி வெப் சீரியஸ்க்கு தடை விதிக்க வேண்டும் என மதுரையை சேர்ந்த பிரபல மாடுபிடி வீரரும், தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பயிற்சி மையத்தின் தலைவரான முடக்காத்தான் மணி மதுரை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்திருந்தார். இந்நிலையில் தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பயிற்சி மையத்தின் தலைவரான முடக்காத்தான் மணியை நேரில் சந்தித்த நடிகர் சசிக்குமார் வதந்தி படத்தில் முடக்காத்தான் மணி என்ற பெயரை தவறாக சித்தரிக்கவில்லை என விளக்கமளித்ததோடு , நான் காரி என்ற படத்தில் நடித்தேன் மதுரைகாரனாக தனக்கு ஜல்லிக்கட்டு குறித்து தெரியும் எனவும், வதந்தி வெப் சீரியஸில் முடக்காத்தான் மணி மட்டுமல்ல மணி என்ற பெயரை வைத்திருக்க கூடியவர்கள் படத்தை பார்த்தால் மகிழ்ச்சியடைவார்கள், நான் ஜல்லிக்கட்டையோ மாடுபிடி வீரர்களை தவறாக சித்தரிக்க அனுமதிக்கமாட்டேன் என்றார். இந்த வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வெளியாகியுள்ளது.