மதுரை செல்லூர் பகுதியில் வைகை ஆற்றங்கரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கீழ் நடைபெறும் பணிகளை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், மாநகராட்சி ஆணையர் கார்த்திக்கேயன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், ” ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் வைகை கரையோரம் நடைபெற்று வரும் கட்டுமான பணிகள் குறித்து செல்லூர், ஆழ்வார்புரம், ராமராயர் மண்டபம் ஆகிய பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டோம். இவற்றில் இரண்டு இடங்களில் மதுரை குறித்த சங்கப்பாடல்கள் காட்சிப்படுத்தும் வகையில் சங்கப்பூங்காக்கள் அமைப்பதற்கான திட்டமும் இரண்டு இடங்களில் இளைஞர்களுக்கான திறந்தவெளி உடற்பயிற்சி கூடம் அமைப்பதற்கான திட்டமும் மேற்கொள்வதற்கான சாத்தியப்பாடுகளை ஆய்வு செய்தோம்.

தொடர்ச்சியாக வருகின்ற செப்டம்பர் 17-ஆம் தேதி நடைபெற உள்ள ஸ்மார்ட் சிட்டி ஆலோசனைக் குழு கூட்டத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நடைபெறும் அனைத்து பணிகள் குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்படும்.

இதை சற்று கவனிக்கவும் - *Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X*
 
 
வைகைக் கரையில் இரண்டு புறங்களிலும் நடைப்பயிற்சி மேற்கொள்வது மற்றும் சைக்கிள் ஓட்டுவதற்கான இடம் ஒதுக்குவதற்கான சாத்தியக்கூறுகள் ஆய்வு செய்ய உள்ளோம். வைகை ஆற்றில் ரசாயனம் கலப்பது, குப்பை கொட்டுவது, கருவேல மரங்களை அகற்றுவது உள்ளிட்ட பல்வேறு பணிகள் குறித்து விவாதிக்கப்படும். மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் வரை படத்திற்கான வேலையை ஜே.ஐ.சி.ஏ.ஏ நிறுவனம் தொடங்கி உள்ளது.
வரைபடத்திற்கான நேரம் அதிகமாக எடுத்துக்கொள்ளப்பட்டு, பின் பணிகள் விரைவாக முடிக்கப்படும் என நம்புகிறோம். இந்த ஆண்டு மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான தற்காலிக மாணவர் சேர்க்கை குறித்து மத்திய மாநில அரசுகள் ஆய்வு செய்து வருகிறது. நீட் தேர்வு முடிந்த பின்பு சேர்க்கை துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ச்சியாக வருகின்ற செப்டம்பர் 17-ஆம் தேதி நடைபெற உள்ள ஸ்மார்ட் சிட்டி ஆலோசனைக் குழு கூட்டத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நடைபெறும் அனைத்து பணிகள் குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்படும்” என தெரிவித்தார்.
 
மேலும் இது குறித்து மூத்த வழக்கறிஞர் ஸ்டாலின் கூறுகையில்,” மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டம் கொரோனா காலகட்டத்தில் மிகவும் தாமதம் ஏற்பட்டது. இதனால் மதுரை மக்கள் மிகுந்த போக்குவரத்து நெரிசலில் சிக்கி வருகின்றனர். எனவே ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகள் விரைவாக முடிக்க வேண்டும்” என கேட்டுக்கொண்டார்