மதுரை மேற்கு சட்ட மன்ற தொகுதிக்கு உட்பட்ட பரவை பகுதியில் புதிய குளியல் தொட்டி, சுகாதார வளாகம், மின் மோட்டார் அமைப்பதற்கான பூமி பூஜை, சுத்திகரிப்பு குடிநீர் இயந்திரம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை முன்னாள் அமைச்சரும், அப்பகுதியின் எம்.எல்.ஏ.,வுமான செல்லூர் கே.ராஜூ துவக்கி வைத்தார். தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்," மதுரையில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., சிலையில் காவித் கொடியை போட்டு அவமானப்படுத்தியவர்களை இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும். எம்.ஜி.ஆர் சமூக நீதித்தலைவர் அவர் சிலை மீது காவிக்கொடியை போட்டவன் இழி பிரவி என்பேன். அவன் மீது கடுமையாக நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
தற்போதைய தி.மு.க., அரசு மேற்கொள்ள உள்ள கொரோனா முன்னெச்சரிக்கை பணி குறித்த கேள்விக்கு
எங்களுடைய ஆட்சி காலத்திலேயே எல்லா பணிகளையும் செய்து முடித்துவிட்டோம். தற்போது கட்டிய வீட்டில் தி.மு.க., அரசு குடியேறியுள்ளது. எனவே கொரோனா தொடர்பான பிரச்னையை ஏற்கனவே வைத்துள்ள உபகரணங்கள் படுக்கை வசதி உள்ளிட்டவைகளை வைத்து முறையாக கவனித்தால் போது.
முல்லை பெரியாறு குடிநீர் திட்டத்தில் சுணக்கம் ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டிற்கு குறித்த கேள்விக்கு
இது தொடர்பான பணி 2023 ஆண்டிற்குள் நிறைவடையும் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். அவர் சொன்னபடி பணிகள் நிறைவடையவில்லை என்றால் பொதுமக்களை திரட்டி கடும் போராட்டம் நடத்துவோம்.
அ.தி.மு.க., குறித்து பண்ருட்டி ராமச்சந்திரன் தெரிவித்த கருத்து குறித்த கேள்விக்கு
அ.தி.மு.க., தொண்டர்களை யாராளும் பணம் கொடுத்து வாங்க முடியாது. அதிமுக தொண்டர்களால் உருவாக்கப்பட்ட இயக்கம் என்றார்.
தொடர்ந்து அ.தி.மு.க., குறித்த கேள்விகளையும், ஓ.பி.எஸ்., குறித்த கேள்விகளையும் தவிர்த்தார். தற்போதைய ஆட்சியில் என்ன நடக்கிறது. மக்களுக்கு என்ன தேவை என்ற கேள்வியை முன் வையுங்கள் என்றும், கலைஞர் கதை வசனம் எழுதினார், ஸ்டாலின் நன்றாக பேசுகிறார். ஆனால் நாட்டு மக்களுக்கு எதுவும் செய்யவில்லை. உதயநிதி ஸ்டாலினை காக்கா பிடிக்க செந்தில் பாலாஜி தெருக்களுக்கு உதயநிதி ஸ்டாலின் பெயரை வைத்து வருகிறார். உதய நிதி நாட்டுக்கு என்ன செய்தார் ? நயந்தாராவை கட்டிப்பிடித்ததும், ஹன்சிக்காவை காதல் செய்ததையும் மட்டும் தான் செய்தார் என தெரிவித்த பின் கிளம்பினார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்