ஒவ்வொரு மாதத்தின் 5  நாட்களும் சபரிமலை ஐயப்பன் கோயிலின் நடை திறக்கப்படுவது வழக்கம். சபரிமலையில் ஐயப்பனுக்கு 41 நாட்கள் நடைபெற்ற சிறப்பு பூஜைகளுக்கு பின்னர் தங்க அங்கி அணிவிக்கப்பட்டு மண்டலபூஜை நடைபெறும். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சரண கோஷத்துடன் தரிசனம் செய்வார்கள்.


Ilaiyaraaja: நான் என் மரியாதையை விட்டுக்கொடுப்பவன் அல்ல; வதந்தியை நம்பாதீங்க: இளையராஜா






சபரிமலை செல்ல பொதுவாக நிலக்கல் வந்து அங்கிருந்து அரசு பேருந்தில் ஏறி பம்பை நதிக்கு சென்று, அங்கிருந்து சுமார் 7 கிலோமீட்டர் தூரம் மலை உச்சியில் ஏற வேண்டும். இந்த பாதைதான் பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. பெரும்பாலான ஐயப்ப பக்தர்கள் இந்த பாதையில் செல்வார்கள். இதேபோல் எருமேலியில் இருந்து சபரிமலைக்கு பெருவழிப்பாதையிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பல மணி நேரம் நடந்து வர செல்வர்.


இந்த இரண்டு பாதையை தாண்டி, மற்ற இரண்டு பாதைகள் உள்ளன. இரண்டு பாதைகளுமே மிக எளிதான பாதைகளாகும். இடுக்கி மாவட்டம் வண்டிப்பெரியார் அருகில் சத்திரம், புல்லுமேடு ஆகிய 2 மலைப்பாதைகள் வழியாக சபரிமலைக்கு செல்ல முடியும். ஒவ்வொரு ஆண்டும் சபரிமலை சீசனையொட்டி இந்த 2 பாதைகளும் ஐயப்ப பக்தர்கள் பாதயாத்திரை செல்வதற்காக திறந்துவிடப்படுவது வழக்கமாகும். அதன்படி, இந்தாண்டும் கடந்த மாதம் சத்திரம், புல்லுமேடு மலைப்பாதைகள் திறக்கப்பட்டன.


இந்த நிலையில் புல்லுமேடு, எருமேலி ஆகிய பாரம்பரிய வனப் பாதைகள் வழியாக நீண்ட தூரம் நடந்து சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குச் செல்லும் பக்தர்கள் தரிசனத்துக்கு விரைவில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படும் என திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் பி.எஸ்.பிரசாந்த் தெரிவித்துள்ளார். பம்பையில் இருந்து சுவாமி ஐயப்பன் சாலை வழியாக சன்னிதானம் செல்லலாம். நீலிமலை வழியை விரும்புவோர் அதையும் தேர்வு செய்யலாம் என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.


மோடி டூ ஸ்டாலின்.. லிஸ்டில் இவருமா? இந்தியாவின் தலையெழுத்தை நிர்ணயிப்பவர்கள் யார்? ஓர் அலசல்!


பக்தர்கள் சரங்குத்தி வழியை தவிர்த்து, சந்திரானந்தன் சாலை வழியாக சன்னிதானத்திற்கு செல்லலாம். புல்லுமேடு மற்றும் எருமேலியில் இருந்து இந்த நியமிக்கப்பட்ட வனப்பாதை வழியாக வருபவர்கள் சிறப்பு எண்களை பெறுவார்கள் மற்றும் கோயிலில் பிரத்யேக வரிசையைப் பயன்படுத்தி தரிசனம் செய்யலாம் என்றும் அவர் கூறினார். வனத்துறையின் ஒத்துழைப்புடன் செயல்படுத்தப்படும் புதிய முறை விரைவில் செயல்பாட்டுக்கு வரும். வனப் பாதைகளைப் பயன்படுத்தும் பக்தர்களுக்கு இந்த சிறப்பு எண் வழங்குவதற்கு வனத்துறை பொறுப்பாகும் என்று கூறினார்.


போதை பொருள் கடத்தல் தலைவனுடன் தொடர்பு? - அண்ணாமலை காட்டும் ஆதாரம்! அன்பில் மகேஸுக்கு தலைவலி




இந்நிலையில், தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு திங்கள்கிழமை மலைக்கோவிலில் பிரார்த்தனை செய்தார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், சபரிமலை சன்னிதானத்தில் மண்டலம் - மகரவிளக்கு விழாவையொட்டி, பக்தர்கள் தரிசனம் செய்ய வசதியாக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதை பாராட்டினார். அரசும், தேவசம்போர்டும் செய்து வரும் வசதிகள் பாராட்டுக்குரியவை என்றும் அவர் கூறினார். சபரிமலை ஐயப்பனை தரிசனம் செய்வதற்காக தென்னிந்திய மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள், நவம்பர் 16 ஆம் தேதி திறக்கப்பட்ட சபரிமலை கோயிலுக்கு வருகை தருகின்றனர். இரண்டு மாத கால மலைக்கோயிலுக்கான யாத்திரை 2025 ஜனவரி 14-ம் தேதி மரகரவிளக்குடன் நிறைவடைவது குறிப்பிடத்தக்கது.